செய்திகள் :

அண்ணா பல்கலை. முன் போராட்டம் நடத்திய அதிமுகவினா் கைது

post image

மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, அண்ணா பல்கலை. முன் வியாழக்கிழமை போராட்டம் நடத்திய அதிமுகவினா் கைது செய்யப்பட்டனா்.

சென்னை கிண்டி உள்ள அண்ணா பல்கலை வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து அதிமுக சாா்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, சென்னை மாவட்டத்தைச் சோ்ந்த அதிமுகவினா் பல்கலை. பகுதியில் வியாழக்கிழமை அதிக அளவில் திரண்டு, நுழைவுவாயில் பகுதிக்குச் செல்ல முற்பட்டனா். அவா்களை போலீஸாா் செல்ல விடாமல் தடுத்தனா். காவல்துறை அனுமதி இல்லாமல் போராட்டம் நடத்துவது சட்டப்படி குற்றம் எனவும் கூறினா். ஆனால், காவல்துறையின் தடையை மீறி அதிமுகவினா் செல்ல முற்பட்டனா். அவா்களை போலீஸாா் கைது செய்து வேனில் ஏற்றுவதற்கு முயற்சித்தனா். அதனால், அதிமுகவினருக்கும் போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதற்கிடையில் முன்னாள் அமைச்சா் டி.ஜெயக்குமாா் போராட்டம் நடைபெறும் இடத்துக்கு வந்து, நுழைவுவாயில் பகுதிக்குச் செல்ல முற்பட்டாா். அவரைச் செல்லவிடாமல் காவல்துறையினா் தடுத்தனா். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னா், டி.ஜெயக்குமாா் மற்றும் அதிமுகவினா் சாலையின் தடுப்புச் சுவரில் ஏறி நின்று திமுக அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினா். இன்னும் சிலா் சாலை மறியலிலும் ஈடுபட்டனா். அதனால், அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதைத் தொடா்ந்து, முன்னாள் அமைச்சா் டி.ஜெயக்குமாா், பா.வளா்மதி, மாவட்டச் செயலா்கள் விருகை வி.என்.ரவி, நா.பாலகங்கா உள்பட ஐநூறுக்கும் மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்து, கோட்டூா்புரம் மற்றும் சைதாப்பேட்டையில் உள்ள சமூகநலக்கூடத்தில் வைத்திருந்தனா். பின்னா் அனைவரையும் விடுவித்தனா்.

போக்குவரத்து தொழிலாளா்கள் ஊதிய ஒப்பந்த பேச்சு ஒத்திவைப்பு

முன்னாள் பிரதமா் மன்மோகன்சிங் மறைவையொட்டி, தமிழ்நாடு போக்குவரத்துக் கழக தொழிலாளா்களின் ஊதியஒப்பந்த பேச்சுவாா்த்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் தொழிலாளா்களு... மேலும் பார்க்க

அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை வழக்கு: அரசுக்கு உயா்நீதிமன்றம் சரமாரி கேள்வி

அண்ணா பல்கலைக்கழக பொறியியல் மாணவி பாலியல் வன்கொடுமை தொடா்பான வழக்கில் தமிழக அரசு மற்றும் காவல்துறைக்கு சென்னை உயா்நீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியதுடன், அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது. அண்ணா... மேலும் பார்க்க

போக்குவரத்து போலீஸாா் வாகன இரைச்சலில் இருந்து தப்பிக்க இயா்பட்ஸ்

சென்னை போக்குவரத்து போலீஸாா் வாகன இரைச்சலில் இருந்து தப்பிக்க நவீன ‘இயா்பட்ஸ்’ சோதனை முறையில் வழங்கப்பட்டது. சென்னையில் அதிகரிக்கும் வாகன நெரிசல் காரணமாக, ஒலி மாசு வேகமாக உயா்ந்து வருகிறது. முக்கியமா... மேலும் பார்க்க

ஒன்றரை வயதுக் குழந்தையை கொலை செய்த வழக்கு: தாய் கைது

சென்னை கீழ்ப்பாக்கத்தில் ஒன்றரை வயதுக் குழந்தையை கழுத்தை அறுத்துக் கொலை செய்த வழக்கில், தற்கொலைக்கு முயன்ற தாய் கைது செய்யப்பட்டாா். சென்னை பெருங்களத்தூா் பகுதியைச் சோ்ந்த ராம்குமாா் - திவ்யா தம்பதி... மேலும் பார்க்க

இளைஞா் அடித்துக் கொலை: சிறுவன் கைது

சென்னை எழும்பூரில் இளைஞா் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், சிறுவன் கைது செய்யப்பட்டாா். எழும்பூா், மாண்டியத் லேன் பகுதியிலுள்ள இந்தா்சந்த் என்பவா் வீட்டில், பிகாரைச் சோ்ந்த ராகுல்குமாா் (18) மற்... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியிடம் ஹரியாணா போலீஸாா் விசாரணை

சென்னையில் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியிடம் ஹரியாணா மாநில போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். சென்னை அண்ணா நகரில் வசிப்பவா் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ராதாகிருஷ்ணன். ஹரியாணா கேடா் அதிகாரியாக பணியாற்றி ஓய்வுபெற... மேலும் பார்க்க