வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... எஸ்பிஐ வங்கியில் 13,735 காலிப்பணியிடங்களுக்கு விண்ண...
அண்ணா பல்கலை.யில் பாலியல் புகார்: மாணவர்கள் போராட்டம் வாபஸ்!
மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரத்தில் சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக வாயிலில் மாணவர்கள் நடத்திய போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்து வரும் ஒரு மாணவரும், மாணவியும் காதலித்து வருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று(செவ்வாய்க்கிழமை) இரவு, இருவரும் கல்லூரி வளாகத்தில் தனியாக பேசிக்கொண்டிருந்தபோது, அங்கு அடையாளம் தெரியாத இருவர் வந்து, மாணவரைத் தாக்கிவிட்டு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர்.
இதையும் படிக்க | கஜகஸ்தானில் பயணிகள் விமானம் விழுந்து தீப்பற்றியது! 42 பேர் பலி
இதையடுத்து மாணவி பாலியல் சீண்டலுக்கு ஆளானதாக கோட்டூர்புரம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதனடிப்படையில் காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளைக் கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், தற்போது இந்த விவகாரத்தில் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதையும் படிக்க | 2024 - 'தயாரிப்பாளர்' உதயநிதி Vs 'ஹீரோ' விஜய் என்ட்ரி! - தயாராகும் தமிழக அரசியல்
தொடர்ந்து, அண்ணா பல்கலைக்கழக வாசலில் மாணவர்கள் சங்கம் இன்று காலை முதல் போராட்டத்தில் ஈடுபட்டது.
மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் நடுநிலையான விசாரணை வேண்டும், மாணவ, மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்டவற்றை வலியுறுத்தி கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனின்னர் காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதையடுத்து, மாணவர்கள் சங்கம் தற்காலிகமாக போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளது.
காவல்துறை முறையாக விசாரணை நடத்தாவிட்டால் போராட்டத்தை மீண்டும் தொடருவோம் என்றும் கூறியுள்ளனர்.
இதனிடையே அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மாணவி பாலியல் புகார் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் நிர்வாகம் காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு தருவதாகவும் பதிவாளர் பிரகாஷ் கூறியுள்ளார்.