பணியிடமாறுதல் கலந்தாய்வு: 4,000 அரசு மருத்துவா்கள் விரும்பிய இடங்களைத் தோ்வு ச...
அதானி குழும லாரியால் இருவர் பலி! 8 வாகனங்களை எரித்து கலவரம்!
மத்தியப் பிரதேசத்தில் கனரக லாரி மோதிய விபத்தில் இருவர் பலியாகினர்.
மத்தியப் பிரதேசத்தில் சிங்ரௌலி மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ராம்லல்லு யாதவ், ராம் சாகர் பிரஜாபதி இருவர் மீதும் கனரக லாரி மோதி கவிழ்ந்ததில் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். விபத்தினை ஏற்படுத்திய கனரக லாரி, அதானி குழுமத்துக்கு சொந்தமான சுரங்கத்தைச் சேர்ந்தது.
விபத்தில் இருவரும் பலியானது குறித்து அறிந்த அப்பகுதி மக்கள், ஆர்ப்பாட்டத்துடன் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். அதுமட்டுமின்றி, 5 பேருந்துகள், 3 லாரிகளுக்கு தீவைத்து கலவரத்திலும் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, அப்பகுதியில் இருந்த ஒரு தொழிற்சாலைக்குள் புகுந்து கலவரம் செய்யவும் முயன்றனர். இருப்பினும், அதற்குள்ளாக அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். தற்போது அப்பகுதியில் நிலைமை கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதையும் படிக்க:சத்தீஸ்கரிலிருந்து கும்பமேளா சென்றவர்கள் கார் விபத்து: 10 பேர் பலி!