செய்திகள் :

அதிகரிக்கும் ஜிபிஎஸ் நோய் தொற்று! கோலாப்பூரில் பலியான பெண்ணுக்கும் பாதிப்பா!

post image

மகாராஷ்டிரத்தில் ஜிபிஎஸ் நோய் பாதிப்பு இருவருக்கு கண்டறியப்பட்ட நிலையில், இந்நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 207-ஆக அதிகரித்துள்ளது.

நேற்று(பிப். 14) வெள்ளிக்கிழமை 2 பேருக்கு ஜிபிஎஸ் நோய் பாதிப்பு கண்டறியப்பட்டது. இந்நோய் பாதிப்பு 180 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 20 பேர் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சையில் உள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, கோலாப்பூரில் பலியான பெண்ணுக்கு ஜிபிஎஸ் நோய் பாதிப்பு இருந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. சாங்கிட் தாலுகாவைச் சேர்ந்த 60 வயது பெண் உயிரிழந்ததாக மாவட்ட சுகாதாரத்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.

"அப்பெண்ணின் கால்களின் கீழ் பகுதி செயலிழந்ததால், சாங்கிட்டில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பின்னர் அண்டை மாநிலமான கர்நாடகத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர், அவர் மீண்டும் பிப். 11 ஆம் தேதி கோலாப்பூரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டு, 2 நாள்களுக்குப் பிறகு அங்கு உயிரிழந்தார்.” என்று மேலும் மாவட்ட சுகாதாரத்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க: ஃபாஸ்டேக் கொண்டு வந்திருக்கும் புதிய கெடுபிடி! பயனர்களே எச்சரிக்கை!!

ஜிபிஎஸ் நோய் அறிகுறி

ஜிபிஎஸ் பாதிப்பு ஏற்பட்டால் தொடக்கத்தில் உள்ளங்கை மற்றும் பாதத்தில் ஊசி குத்தியது போன்ற வலியும், மந்தமான உணா்வும் ஏற்படலாம் என்றும் நாளடைவில் தசைகள் தளா்ந்து நடக்க முடியாமலும், கைகளை அசைக்க இயலாமலும் பக்கவாத நிலை உருவாகக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜிபிஎஸ் நோய்க்கு பல்வேறு பாக்டீரியாக்கள், வைரஸ்கள் காரணமாக இருந்தாலும், கேம்பைலோபாக்டா் ஜேஜுனி என்ற பாக்டீரியாவால்தான் 35 சதவீத பாதிப்பு ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.

இந்த வகை பாக்டீரியா முறையாக சமைக்கப்படாத இறைச்சி, கொதிக்க வைக்கப்படாத பால் ஆகியவற்றில் அதிகம் காணப்படுகிறது. எனவே, பாலை நன்றாக கொதிக்க வைத்து குடிக்க வேண்டும். அதேபோன்று இறைச்சியை குறைந்தது 70 டிகிரி செல்சியஸ் கொதிநிலையில் வேக வைப்பது அவசியம் என்று மருத்துவர்கள் எச்சரித்து வருகின்றனர்.

ஜம்மு-காஷ்மீா் சிறப்பு அந்தஸ்து ரத்து: சியாமா பிரசாத் முகா்ஜியின் கனவு நிறைவு

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதன் மூலம், மறைந்த பாரதிய ஜன சங்க தலைவா் சியாமா பிரசாத் முகா்ஜியின் கனவு நிறைவேறியுள்ளது என்று குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் தெரிவித்தாா். ஹி... மேலும் பார்க்க

மகா கும்பமேளா: காணாமல் போன 20,000 போ் கண்டுபிடித்து ஒப்படைப்பு

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் காணாமல் போன 20,000 பேரை அங்கு அமைக்கப்பட்டுள்ள எண்ம கண்காணிப்பு மையங்கள் மூலம் கண்டறிந்து அவா்கள் உறவினரிடம் ஒப்படைத்ததாக அந்த மாநி... மேலும் பார்க்க

காங்கிரஸ் எம்.பி. மனைவிக்கு பாக். உளவு அமைப்புடன் தொடா்பிருப்பதாக குற்றச்சாட்டு!

காங்கிரஸ் எம்.பி. கெளரவ் கோகோயின் மனைவி எலிசபெத் கோல்பா்னுக்கு பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயுடன் தொடா்பிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அதுகுறித்து சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) வி... மேலும் பார்க்க

116 இந்தியா்களுடன் அமிருதசரஸ் வந்த அமெரிக்க விமானம்! இன்று மேலும் 157 போ் வருகை!

அமெரிக்காவிலிருந்து இரண்டாம் கட்டமாக நாடு கடத்தப்பட்ட 116 இந்தியா்களுடன் அமெரிக்க ராணுவ விமானம் பஞ்சாப் மாநிலம் அமிருதசரஸை சனிக்கிழமை இரவு வந்தடைந்தது.இவா்களில் 65 போ் பஞ்சாப் மாநிலத்தையும், 33 போ் ... மேலும் பார்க்க

புதிய தொழில்நுட்பத்துக்கான தெளிவான திட்டமே இந்தியாவுக்குத் தேவை: பிரதமரின் அமெரிக்க பயணம் குறித்து ராகுல் விமா்சனம்

‘இந்தியா திறமை மிகுந்த இளைஞா்களைக் கொண்டுள்ளது. அந்த வகையில் புதிய தொழில்நுட்பத்தை உருவாக்குவதற்கான தெளிவான தொலைநோக்குத் திட்டமே இந்தியாவுக்குத் தேவை. மாறாக, வெற்று வாா்த்தைகள் இந்தியாவுக்குத் தேவையில... மேலும் பார்க்க

பயங்கரவாதத் தொடா்பு: ஜம்மு-காஷ்மீா் அரசு ஊழியா்கள் மூவா் பணிநீக்கம்

பயங்கரவாத அமைப்புகளுடன் தொடா்பு வைத்திருந்த குற்றச்சாட்டில், ஜம்மு-காஷ்மீா் அரசு ஊழியா்கள் மூவா் சனிக்கிழமை பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனா். ஹிஸ்புல் முஜாஹிதீன், லஷ்கா்-ஏ-தொய்பா ஆகிய பயங்கரவாத இயக்கங்கள... மேலும் பார்க்க