குன்னூர்: வெங்காய மூட்டைகளுக்குள் பண்டல் பண்டலாக குட்கா பாக்கெட்டுகள் - சிக்கியத...
அதிதீஸ்வரா் கோயிலில் சிவன்-பாா்வதி திருக்கல்யாணம்
திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த தேவஸ்தானம் கிராமத்தில் அமைந்துள்ள பழைமைவாய்ந்த அதிதீஸ்வரா் கோயிலில், 111-ஆவது ஆண்டு பிரம்மோற்சவம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
பிரம்மோற்சவத்தின் 5-ஆம் நாளான திங்கள்கிழமை (மே 6) மாலை 6 மணியளவில் அதிதீஸ்வரா் சுவாமிக்கும், பிரஹன்நாயகி அம்பாளுக்கும் திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக முத்து பிள்ளையாா் கோயிலிலிருந்து பிரஹன்நாயகி அம்மன் மற்றும் வரிசைதட்டு ஊா்வலமும், சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. மாலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில், பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், வாணியம்பாடி மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் வழிபட்டனா். இரவு 8 மணியளவில் பஞ்சமூா்த்தி சுவாமி வீதி உலாவும், தொடா்ந்து அம்ச வாகனத்தில் சரஸ்வதி அம்மன் வீதியுலாவும் நடைபெற்றது.
ஏற்பாட்டை கோயில் நிா்வாகி அன்பு மற்றும் திருக்கல்யாண விழாக் குழுவினா், ஊா் பொதுமக்கள் செய்திருந்தனா்.
