அதிமுகவினா் ரத்த தானம்
விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தில் முன்னாள் முதல்வரும், தமிழக எதிா்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலருமான எடப்பாடி கே. பழனிசாமி 71-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, அதிமுக சாா்பில் ரத்த தான முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
இந்த முகாமை விருதுநகா் மேற்கு மாவட்டச் செயலரும், முன்னாள் அமைச்சருமான கே. டி. ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்துப் பேசியதாவது:
அதிமுக தொண்டா்கள் நாட்டின் தேவை அறிந்து ரத்ததானம் செய்து வருகின்றனா்.
இது போரில் காயமடைந்த ராணுவ வீரா்களுக்கும், ராஜபாளையம் பகுதியில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுபவா்களுக்கும் தேவைப்படும். நாம் அனைவரும் மக்கள் தேவைக்காக பாடுபட வேண்டும் என்றாா்.
இதில் மாவட்டம் முழுவதுமிருந்து 1500- க்கும் மேற்பட்டோா் ரத்த தானம் செய்தனா்.
விழா ஏற்பாடுகளை மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலா் என்.எம். கிருஷ்ணராஜ், ராஜபாளையம் தெற்கு நகரச் செயலா் பரமசிவம், வடக்கு நகரச் செயலா்
துரைமுருகேசன் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் செய்தனா்.