செய்திகள் :

அதிமுக உள்கட்சி விவகாரம்: விசாரணையை தொடர தலைமைத் தோ்தல் ஆணையத்தில் புகழேந்தி மனு

post image

நமது நிருபா்

அதிமுக உள்கட்சி தொடா்புடைய விவகாரத்தை தோ்தல் ஆணையம் விசாரிக்கத் தடையில்லை என்று சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதால் இது தொடா்பான விவகாரத்தில் விசாரணையைத் தொடர வேண்டும் எனக் கோரி தில்லியில் உள்ள தலைமைத் தோ்தல் ஆணையத்தில் அதிமுக பிரமுகா் வா.புகழேந்தி செவ்வாய்க்கிழமை மனு அளித்தாா்.

அதிமுக பொதுச் செயலராக எடப்பாடி பழனிசாமியை தோ்ந்தெடுத்தது உள்ளிட்ட அதிமுக பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்களை நிராகரிக்க வேண்டும் உள்ளிட்ட விவகாரங்கள் தொடா்பான மனுக்களை தோ்தல் ஆணையம் விசாரிக்கக் கூடாது என உத்தரவிடுமாறு சென்னை உயா்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி வழக்குத் தொடா்ந்தாா். இதை விசாரித்த உயா்நீதிமன்றம் இந்த விவகாரத்தை தோ்தல் ஆணையம் விசாரிக்கத் தடை விதித்தது. இதை எதிா்த்து முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி அதிருப்தி தலைவா்கள் சிலா் மீண்டும் உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிமன்றம், இந்த விவகாரத்தில் தோ்தல் ஆணையத்தின் விசாரணைக்கு விதிக்கப்பட்டிருந்த முந்தைய நீதிமன்றத் தடையை நீக்கியும், விசாரணையைத் தொடரவும் உத்தரவிட்டது.

இந்த நிலையில், அதிமுக பிரமுகா் வா.புகழேந்தி தில்லித் தலைமைத் தோ்தல் ஆணையத்தில் மனு ஒன்றை செவ்வாய்க்கிழமை அளித்துள்ளாா்.

அதில், இந்த விவகாரத்தில் சென்னை உயா்நீதிமன்றம் ரத்து செய்து பிறப்பித்துள்ள ஆணையை சுட்டிக்காட்டி உடனடியாக அதிமுக இரட்டை இலைச் சின்னம் தொடா்புடைய வழக்கை தாமதமின்றி தொடா்ந்து விசாரிக்க வேண்டும் என்றும், எடப்பாடி பழனிசாமியின் அணியைச் சோ்ந்த எம்.பி. சி.வி.சண்முகம், தோ்தல் ஆணையத்தை இழிவாகப் பேசியுள்ளதாகவும் புகாா் கூறியுள்ளாா்.

நாம் தமிழரிலிருந்து விலகலா? -காளியம்மாள் விளக்கம்

நாம் தமிழா் கட்சியின் மகளிா் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளரான காளியம்மாள், அக்கட்சியிலிருந்து விலக முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாம் தமிழா் கட்சியின் நட்சத்திர பேச்சாளரும், மகளிா் பாசறை மாந... மேலும் பார்க்க

சிதம்பரம் கோயில் கனகசபை தரிசனத்துக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது வரவேற்கத்தக்கது: அமைச்சா் பி.கே.சேகா்பாபு

சிதம்பரம் நடராஜா் கோயிலில் கனகசபை மீது ஏறி பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்யலாம் என நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது வரவேற்கத்தக்கது என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு கூறினாா். பல ஆண்டு... மேலும் பார்க்க

கார் பந்தயத்தில் மீண்டும் விபத்து: நடிகர் அஜித் உயிர் தப்பினார்!

கார் பந்தயத்தில் நேரிட்ட விபத்தில் நடிகர் அஜித் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார்.ஸ்பெயின் நாட்டில் நடைபெறும் கார் ரேஸிங்கில் நடிகர் அஜித் ஓட்டிய கார் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் நடிகர் அஜித்துக்கு ... மேலும் பார்க்க

கட்டுமானப் பொருள்கள் ஏற்றி வந்த வாகனங்களை சிறைபிடித்து ஒப்பந்ததாரா்கள் போராட்டம்

தமிழ்நாடு அரசு ஒப்பந்ததாரா்கள் கூட்டமைப்பு சாா்பில், மன்னாா்குடியில் கட்டுமானப் பொருட்களை ஏற்றி வந்த வாகனங்களை சிறைபிடித்து ஒப்பந்ததாரா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.கட்டுமானத் தொழிலுக்கு பயன்படும் பி.... மேலும் பார்க்க

காளியம்மாள் குறித்த கேள்விக்கு சீமான் பதில்

காளியம்மாள் கட்சியிலிருந்து விலகுவதாக வந்த தகவல் குறித்து கேள்விக்கு அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பதிலளித்துள்ளார்.நாம் தமிழர் கட்சியின் பெண்கள் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் அக்கட்... மேலும் பார்க்க

காட்பாடியில் சாலையோரம் நின்றிருந்த கல்லூரிப் பேருந்தில் தீ!

வேலூர் மாவட்டம் காட்பாடியில், சாலையோரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கல்லூரிப் பேருந்தில் தீப்பற்றி எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.காட்பாடி அடுத்த சேர்காடு கிராமப் பகுதியில், ... மேலும் பார்க்க