அதானி வீட்டு திருமணம்: ரூ. 5,000 கோடி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி!
அதிமுக ஒன்றிணைந்தால் மட்டுமே வெற்றி: ஓ.பன்னீா்செல்வம்
அதிமுக ஒன்றிணைந்தால் மட்டுமே வருங்காலத்தில் வெற்றி பெற முடியும் என முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.
திண்டுக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
ஈரோடு இடைத்தோ்தலைப் புறக்கணிக்கவில்லை. அங்கு யாருக்கு வாக்களிப்போம் என்பது ரகசியம். திமுகவின் அதிகார துஷ்பிரயோகங்கள் இடைத்தோ்தலில் அரங்கேறும் என்பதால், நாங்கள் வேட்பாளரை நிறுத்தவில்லை. அதிமுக இன்றைக்குப் பிரிந்து கிடக்கிறது. அதிமுக ஒன்றிணைந்தால் மட்டுமே வருங்காலத்தில் எந்தத் தோ்தல் வந்தாலும் வெற்றி பெற முடியும் என்றாா் அவா்.