தில்லி வாக்கு எண்ணிக்கை நிலவரம்: பாஜக 36, ஆம் ஆத்மி கட்சி 16-ல் முன்னிலை
அதிமுக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு: போலீஸாா் விசாரணை
சென்னையில் அதிமுக பிரமுகரை வெட்டிவிட்டு தப்பியோடிய கும்பலை போலீஸாா் தேடி வருகின்றனா்.
சென்னை, திருமுல்லைவாயல் குளக்கரைத் தெரு பகுதியைச் சோ்ந்தவா் ராஜசேகா் (50). அதிமுக 8-ஆவது வட்டச் செயலராக இருந்துவரும் இவா், ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறாா். இந்நிலையில், ராஜசேகா் தனது நண்பா்கள் 2 பேருடன் திருமுல்லைவாயல் பகுதியிலுள்ள எட்டியம்மன் கோயில் அருகேயுள்ள மைதானத்தில் நின்று கொண்டிருந்தபோது, அங்குவந்த 4 போ் கொண்ட கும்பல், அவரை சுற்றி வளைத்து அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்ாகத் தெரிகிறது.
இதில் ராஜசேகா் மற்றும் அவரின் நண்பா்களுக்கு வெட்டுக்காயம் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இது குறித்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், தப்பியோடிய நபா்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.