சாம்பியன்ஸ் டிராபி மகுடம் சூடிய இந்திய அணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
அதிர்ஷ்டம் தேடிவரும் இந்த ராசிக்கு: வார பலன்கள்!
ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார (மார்ச் 07 - 13) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.
மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)
திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். பொருளாதார நிலைமை சீரடையும். செயல்களைச் சிறப்பாகச் செய்வீர்கள். கடன்கள் திரும்ப வந்துசேரும்.
உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கும். வியாபாரிகள் புதிய முதலீடுகளைச் செய்வீர்கள். விவசாயிகளுக்கு லாபம் அதிகரிக்கும்.
அரசியல்வாதிகள் நிதானத்துடன் கட்சிப் பணியாற்றுவீர்கள். கலைத் துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைப்பதில் தாமதமாகும். பெண்கள் சுப நிகழ்ச்சிகளை நடத்துவீர்கள். மாணவர்கள் பாடங்களில் சந்தேகங்களை ஆசிரியர்களிடம் கேட்பீர்கள்.
சந்திராஷ்டமம்- இல்லை.
ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)
குடும்ப ஒற்றுமை ஓங்கும். பணவருவாய் சிறக்கும். சேமிப்புகளைக் கூட்டிக் கொள்வீர்கள். உதவிகள் கிடைக்கும்.
உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் அறிவுரைகளை உதாசீனப்படுத்த மாட்டீர்கள். வியாபாரிகள் கூட்டாளிகளுடன் கவனமாக இருப்பீர்கள்.
விவசாயிகள் புதிய கால்நடைகளை வாங்குவீர்கள். அரசியல்வாதிகள் கட்சிப் பயணங்களால் நன்மை அடைவீர்கள். கலைத் துறையினர் சகக் கலைஞர்களிடம் கவனம் தேவை. பெண்கள் குடும்பத்தினரின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். மாணவர்கள் கல்வியில் பொறுப்புடன் இருப்பீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
மிதுனம் (மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)
தடைபட்டிருந்த வேலைகளைத் தொடங்குவீர்கள். நோய்கள் அகலும். வருவாய் அதிகரிக்கும். உடன் பணிபுரிவோரை அனுசரித்து நடப்பீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் அலுவலக வேலைகளைத் திருப்திகரமாகச் செய்வீர்கள். வியாபாரிகள் நண்பர்களிடம் சிறிது பாராமுகமாக இருப்பார்கள். விவசாயிகள் புதிய குத்தகைகளை எடுப்பீர்கள்.
அரசியல்வாதிகள் பிறரை அனுசரித்து நடப்பீர்கள். கலைத் துறையினர் எதிர்பார்த்த வருவாயைப் பெறுவீர்கள். பெண்கள் வீண்வாக்குவாதங்களைத் தவிர்ப்பீர்கள். மாணவர்கள் விளையாட்டுகளில் வெற்றி பெறுவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)
கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் இருக்கவும். குறைகளைத் திருத்திக் கொள்வீர்கள். அரசு உதவிகள் தேடி வரும். உடன்பிறந்தோர் அனுசரித்து நடப்பார்கள்.
உத்தியோகஸ்தர்கள் பிறருடன் நட்புடன் இருப்பார்கள். வியாபாரிகள் தேவையான பொருள்களை வாங்கி விற்பார்கள். விவசாயிகளுக்கு விளைச்சல் நன்றாக இருக்கும்.
அரசியல்வாதிகளுக்கு புதிய பதவிகள் கிடைக்கும். கலைத் துறையினர் உதவிகளைப் பெறுவீர்கள். பெண்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செயல்படுவீர்கள். மாணவர்களுக்கு பெற்றோரின் ஆதரவு கிடைக்கும்.
சந்திராஷ்டமம் - இல்லை.
சிம்மம் (மகம், பூரம், உத்திரம் முதல் பாதம் முடிய)
மகிழ்ச்சியாக இருப்பீர்கள். வீட்டிலும் வெளியிலும் புதிய பொறுப்புகள் கிடைக்கும். பெரியோரின் ஆசிகளைப் பெறுவீர்கள். மருத்துவச் செலவுகள் ஏற்படாது.
உத்தியோகஸ்தர்கள் கடுமையாக உழைப்பீர்கள். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். விவசாயிகள் நீர்ப்பாசன வசதிகளைப் பெருக்குவீர்கள்.
அரசியல்வாதிகளின் முயற்சிகள் வெற்றி பெறும். கலைத் துறையினர் புதிய யுக்திகளைப் புகுத்துவீர்கள். பெண்கள் கணவருடன் ஒற்றுமையைக் காண்பீர்கள். மாணவர்கள் சக மாணவர்களுடன் அனுசரித்து நடந்துகொள்வீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)
பலத்தையும் பலவீனத்தையும் புரிந்து செயலாற்றுவீர்கள். சமுதாயத்தில் உயர்ந்தோரின் நட்பு கிடைக்கும். கௌரமும் அந்தஸ்தும் உயரும். வழக்குகளில் சாதகமான தீர்ப்பை எதிர்பார்க்கலாம்.
உத்தியோகஸ்தர்களுக்கு ஊதிய உயர்வு தேடி வரும். வியாபாரிகள் சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். விவசாயிகள் லாபம் அடைவீர்கள்.
அரசியல்வாதிகள் மேலிடத்தின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். கலைத் துறையினர் ரசிகர்களின் ஆதரவைத் தக்க வைப்பீர்கள். பெண்களுக்கு வருமானம் கிடைக்கும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம்
மன உளைச்சலிலிருந்து விடுபடுவீர்கள். குழந்தைகளின் முன்னேற்றம் சிறக்கும். ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும். பணியாளர்களை மாற்றுவீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளுடன் ஆதரவாய் இருப்பீர்கள். வியாபாரிகளுக்கு முன்னேற்றமான சூழல் உருவாகும். விவசாயிகள் கையிருப்புப் பொருள்கள் மீது அக்கறை செலுத்தவும்.
அரசியல்வாதிகள் தொண்டர்களுக்கு ஆதரவாக நடப்பீர்கள். கலைத் துறையினர் நற்பலனை அடைவீர்கள். பெண்கள் விட்டுக் கொடுத்து நடப்பீர்கள். மாணவர்களுக்கு விளையாட்டுகளில் வெற்றி உண்டு.
சந்திராஷ்டமம் - மார்ச் 7.
விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)
திறமைகளை வளர்த்துக்கொள்வீர்கள். தாய்வழி உறவினர்களால் நன்மை உண்டாகும். சிறுசிரமங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தை கவனிக்கவும்.
உத்தியோகஸ்தர்களின் கோரிக்கைகள் நிறைவேறும். வியாபாரிகள் புதிய சந்தைகளை நாடிச் செல்வீர்கள். விவசாயிகள் போட்டிகளுக்கு தக்கவாறு நடப்பீர்கள்.
அரசியல்வாதிகளுக்கு மேலிடக் கண்காணிப்பு அதிகரிக்கும். கலைத் துறையினர் சுறுசுறுப்புடன் இருப்பீர்கள். பெண்கள் குடும்பத்தில் நிறைவைக் காண்பீர்கள். மாணவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவீர்கள்.
சந்திராஷ்டமம் - மார்ச் 8,9.
தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)
பிரிந்திருந்தோர் நட்பு கொள்வார்கள். தொழிலில் இறுக்கமான சூழ்நிலை மாறும். கடினமான வேலைகளில் வெற்றி பெறுவீர்கள். அதிர்ஷ்ட வாய்ப்புகளைப் பெறுவீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் வேலைகளைக் குறித்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். வியாபாரிகள் புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். விவசாயிகள் கூடுதல் விளைச்சலைக் காண்பீர்கள்.
அரசியல்வாதிகள் பாராட்டுகளைப் பெறுவீர்கள். கலைத் துறையினர் புதிய ஒப்பந்தங்களை மேற்கொள்வீர்கள். பெண்களுக்கு உறவினர்கள் உதவுவார்கள். மாணவர்களுக்கு ஆசிரியர்களின் ஆதரவு கிடைக்கும்.
சந்திராஷ்டமம் - மார்ச் 10,11.
மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)
தொழிலில் முன்னேற்றம் அடைவதோடு, வெளியூருக்கும் விரிவுபடுத்துவீர்கள். வாராக்கடன் கைவந்து சேரும். பங்கு வர்த்தகத்தில் லாபம் கிடைக்கும்.
உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். வியாபாரிகளுக்கு போட்டி, பொறாமை குறையும். விவசாயிகள் வழக்குகளில் வெற்றி பெறுவீர்கள்.
அரசியல்வாதிகளின் கோரிக்கைகள் நிறைவேறும். கலைத் துறையினருக்கு ரசிகர்களின் ஆதரவு கிடைக்கும். பெண்கள் ஆன்மிகத்தில் மனதை ஈடுபடுத்துவீர்கள். மாணவர்கள் படிப்பில் விருப்பப்பட்ட துறைகளில் சேர்வீர்கள்.
சந்திராஷ்டமம் - மார்ச் 12, 13.
கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)
பொறுப்பான பதவிகள் கிடைக்கும். பணிகளைத் திட்டமிட்டு முடிப்பீர்கள். பிறரின் ஆதரவைப் பெறுவீர்கள். புகழ் கிடைக்கும்.
உத்தியோகஸ்தர்கள் தேவைக்கேற்ற பலனை அனுபவிப்பீர்கள். வியாபாரிகள் நல்ல லாபத்தைக் காண்பீர்கள். விவசாயிகள் பாசன வசதிகளை மேம்படுத்துவீர்கள்.
அரசியல்வாதிகள் தொண்டர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். கலைத் துறையினருக்கு புது வாய்ப்புகள் கிடைக்கும். பெண்கள் உடல் உபாதைகளால் சஞ்சலம் அடைவீர்கள். மாணவர்கள் அதிகாலையில் எழுந்து
படிப்பீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)
பாராட்டும் விருதுகளும் தேடி வரும். உழைப்பை அதிகரித்தால் புகழ் பெறலாம். மனக் குழப்பம் ஏற்பட்டு விலகும். இளைய சகோதரர்களால் நன்மை அடைவீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் சில சலுகைகளைப் பெறுவீர்கள். வியாபாரிகள் புதிய நுணுக்கங்களைப் புகுத்துவீர்கள். விவசாயிகள் பிறரை அனுசரித்து நடப்பீர்கள்.
அரசியல்வாதிகளின் செயல்திறன் அதிகரிக்கும். கலைத் துறையினர் கவனத்துடன் இருக்கவும். பெண்களுக்கு கணவருடன் ஒற்றுமை அதிகரிக்கும். மாணவர்களுக்கு பெற்றோர் ஆதரவு சிறப்பாக இருக்கும்.
சந்திராஷ்டமம் - இல்லை.