அந்தமானில் தொடங்கியது தென்மேற்குப் பருவமழை!
அந்தமானில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் பல பகுதிகளில் கோடை வெய்யில் மண்டையைப் பிளந்து வருகிறது. அவ்வப்போது இரவில் மிதமான மழை தலைகாட்டி வந்தாலும், பல பகுதிகளில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பம் பதிவாகியுள்ளது. குறிப்பாக வேலூர், கரூர் உள்ளிட்ட பகுதிகளில் 100 டிகிரிக்கு மேல் வெப்பம் பதிவாகியுள்ளது.
இந்த நிலையில், தென்மேற்குப் பருவமழை முன்கூட்டியே இந்தாண்டு தொடங்கும் எனக் கணிக்கப்பட்ட நிலையில், தெற்கு அந்தமான், நிக்கோபார் தீவு, தென்கிழக்கு வங்கக் கடலில் தென்மேற்குப் பருவமழை இன்று தொடங்கியுள்ளது.
அதேபோன்று கேரளத்தில் இந்தாண்டு முன்கூட்டியே வரும் 27-ஆம் தேதி தென்மேற்குப் பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்மை மையம் தகவல் தெரிவித்துள்ளது.