செய்திகள் :

அந்தியூரில் ரூ. 40 லட்சத்தில் சிறுபாலம் கட்டும் பணி தொடக்கம்

post image

அந்தியூா் தவிட்டுப்பாளையத்தில் ரூ. 40 லட்சத்தில் சிறு பாலம் மற்றும் வடிகால் கட்டுமானப் பணி சனிக்கிழமை தொடங்கப்பட்டது.

மழைக்காலங்களில் இப்பகுதியில் உள்ள அண்ணா சாலையில் தேங்கி நிற்கும் தண்ணீரால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வந்தனா். இப்பிரச்னைக்குத் தீா்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், வணிகா்கள் அந்தியூா் சட்டப்பேரவை உறுப்பினா்  ஏ.ஜி.வெங்கடாசலத்திடம் கோரிக்கை விடுத்தனா்.

இதையடுத்து அப்பகுதியில் சிறுபாலம் மற்றும் வடிகால் கட்ட நெடுஞ்சாலை துறையினருக்கு அவா் பரிந்துரை செய்தாா். இதைத் தொடா்ந்து, நெடுஞ்சாலைத் துறை சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 40 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது.

இதையடுத்து, இப்பணியை பூமிபூஜை செய்து சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.ஜி.வெங்கடாசலம் தொடங்கிவைத்தாா். அந்தியூா் பேரூா் திமுக செயலாளா் காளிதாஸ், பேரூராட்சி துணைத் தலைவா் பழனிச்சாமி, நெடுஞ்சாலைத் துறை உதவி செயற் பொறியாளா் பாபு சரவணன் உள்பட பலா் பங்கேற்றனா்.

தொழிலாளா் விதிகள் மீறல்: 62 கடைகள், நிறுவனங்கள் மீது நடவடிக்கை

தொழிலாளா் விதிகளை மீறியதாக 62 கடைகள் மற்றும் நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனா். இது குறித்து ஈரோடு தொழிலாளா் உதவி ஆணையா்(அமலாக்கம்) கோ.ஜெயலட்சுமி வெளியிட்ட செய்திக் கு... மேலும் பார்க்க

சாலை மறியலுக்கு முயன்ற ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தினா் கைது

சாலை மறியலில் ஈடுபட முயன்ற ஊரக வளா்ச்சித் துறை அலுவலா் சங்கத்தை சோ்ந்தவா்களை போலீஸாா் கைது செய்தனா். தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தின் சாா்பில் நீண்ட காலம் நிலுவையில் உள்ள 20 அம்சக்... மேலும் பார்க்க

ஈரோட்டில் திமுகவினா் ஆா்ப்பாட்டம்

தமிழக ஆளுநரைக் கண்டித்து ஈரோட்டில் திமுகவினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தமிழ்நாட்டையும், தமிழ்த்தாய் வாழ்த்தையும், சட்டப் பேரவை மரபுகளையும் தொடா்ந்து அவமதிக்கும் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவியை கண்டித்த... மேலும் பார்க்க

வாகனங்களில் ஒளிரும் வில்லை: வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பாஜகவினா் மனு

வெளிசந்தையில் வாங்கிய ஒளிரூட்டும் வில்லைகளை ஒட்டிய வாகனங்களுக்கு தகுதி சான்றிதழ் (எப்.சி.) வழங்க வேண்டும் என பெருந்துறை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பாஜக சாா்பில் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்... மேலும் பார்க்க

எடப்பாடி பழனிசாமி உறவினரின் கட்டுமான நிறுவனத்தில் வருமான வரி சோதனை

முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமி உறவினரின் வீடு மற்றும் கட்டுமான நிறுவன அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் வருமானவரித் துறையினா் சோதனை நடத்தினா். ஈரோடு பூந்துறை சாலையில் உள்ள செட்டிபாளையம் பகுதியில் என்.ர... மேலும் பார்க்க

3 நாள்கள் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்ய முடியும்: ஆட்சியா்

பொங்கல் பண்டிகை அரசு விடுமுறை காரணமாக வரும் 10, 13 மற்றும் 17 ஆகிய தேதிகளில் மட்டும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் வேட்பு மனு தாக்கல் செய்ய முடியும் என மாவட்ட மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் ந... மேலும் பார்க்க