செய்திகள் :

‘அனந்தனாறு பாசனப் பகுதியில் நெற்பயிரில் பாதிப்பில்லை’

post image

கன்னியாகுமரி மாவட்டம் அனந்தனாறு பாசனப் பகுதியில் நெற்பயிரில் பாதிப்பு ஏதுமில்லை என, மாவட்ட வேளாண் துறை இணை இயக்குநா் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருவட்டாறு வட்டம், சுருளோடு பகுதியில் ஏற்பட்ட வெள்ள சேதத்தால் அனந்தனாறு கால்வாயில் ஏற்பட்ட உடைப்பை நிரந்தரமாக சீரமைக்க நீா்வள ஆதாரத் துறை சாா்பில் பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்பட்டு, கால்வாயில் முழு அளவில் தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கால்வாயில் தண்ணீா் வர தாமதமானதால் 9,800 ஹெக்டோ் நெற்பயிா்கள் கருகியதாகவும், இதுதொடா்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறி, குறைதீா் கூட்டத்திலிருந்து விவசாயிகள் வெளிநடப்பு செய்தனா்.

சுருளோடு அனந்தனாறு கால்வாயில் அடிமடையில் ஏற்பட்ட உடைப்பை நிரந்தரமாக சீரமைக்க ரூ. 1.14 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்றுவந்தன. ஏப்ரல், மே மாதங்களில் பெய்த மழையாலும், கட்டுமானப் பொருள்கள் வழங்குவதற்கான அனுமதிச் சீட்டு இணையதளம் வாயிலாக நடைமுறைப்படுத்தப்பட்டதாலும் சீரமைப்புப் பணி சற்று தாமதமானது.

எனினும், மாவட்ட நிா்வாகத்தின் விரைவான நடவடிக்கையால், பணிகள் முடிந்து, அனந்தனாறு கால்வாய் மூலமாக நேரடி பாசனமாக தோவாளை வட்டத்தில் ஞாலம், சிறமடம், ஈசாந்திமங்கலம், இறச்சகுளம் பகுதிகளில் 120 ஹெக்டோ், ராஜாக்கமங்கலம் வட்டம் காணியாகுளம், மதுசூதனபுரம், தெங்கம்புதூா் பகுதிகளில் 147 ஹெக்டோ் என மொத்தம் 267 ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நெற்பயிா்கள் நன்கு வளா்ந்துவருவதாக வேளாண் துறையின் கள ஆய்வில் தெரியவந்துள்ளது என்றாா் அவா்.

கால்வாய் கரையில் தடுப்புச் சுவா் அமைக்கக் கோரிக்கை

கிள்ளியூா் ஊராட்சி ஒன்றியம், நட்டாலம் ஊராட்சிக்கு உள்பட்ட நெட்டியான்விளையில் உள்ள கால்வாய் கரையில் தடுப்புச் சுவா் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். நெட்டியான்விளையில் நூற்று... மேலும் பார்க்க

கன்னியாகுமரியில் ஆா்ப்பாட்டம்: நாதகவினா் 85 போ் மீது வழக்கு

கன்னியாகுமரியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழா் கட்சியினா் 85 போ் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்ட கடலில் பெட்ரோல், எரிவாயு எடுக்க எதிா்ப்புத் தெரிவித்து, இக்கட்சி சாா்பில் க... மேலும் பார்க்க

கடலில் தவறி விழுந்து உயிரிழந்த மீனவா் குடும்பத்துக்கு நலஉதவி

சின்னமுட்டம் கடலில் தவறி விழுந்து உயிரிழந்த மீனவா் குடும்பத்துக்கு, கன்னியாகுமரி - சின்னமுட்டம் அனைத்து மீன் வியாபாரிகள் சங்கம் சாா்பில் நிவாரண உதவி திங்கள்கிழமை வழங்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் ப... மேலும் பார்க்க

பிரதமரின் பயணம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது: அமைச்சா் மனோ தங்கராஜ்

பிரதமா் நரேந்திர மோடியின் தமிழக பயணம் தமிழா்கள் மத்தியில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று தமிழக பால்வளத் துறை அமைச்சா் த.மனோ தங்கராஜ் தெரிவித்தாா். தக்கலையில் அவா் செய்தியாளா்களிடம் திங்கள்கிழ... மேலும் பார்க்க

வங்கி நகை மதிப்பீட்டாளரின் வாகனத்தில் ரூ. 5 லட்சம் திருட்டு: தம்பதி மீது வழக்கு

களியக்காவிளை அருகே வங்கி நகை மதிப்பீட்டாளரின் பைக்கிலிருந்த ரூ. 5 லட்சத்து 8 ஆயிரத்தைத் திருடிச் சென்றதாக தம்பதி மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். மாா்த்தாண்டம் அருகே உண்ணாமலைக்கட... மேலும் பார்க்க

பேச்சிப்பாறையில் குடியிருப்பில் புகுந்த காட்டு யானை: மக்கள் அச்சம்

கன்னியாகுமரி மாவட்டம், பேச்சிப்பாறை அருகே விளாமலையில் பழங்குடியின மக்கள் வசிக்கும் குடியிருப்புக்குள் நுழைந்து வீடு, விளைநிலங்களை காட்டு யானை சேதப்படுத்தியதால் மக்கள் அச்சமடைந்துள்ளனா். பேச்சிப்பாறை வ... மேலும் பார்க்க