`தமிழகத்தில் தங்கம் விலை நிலவரத்தைப்போல கொலை நிலவரம்...' - இபிஎஸ் பேச்சு!
அனல் பறக்கும் கலைப்படைப்பு... பைசன் படத்தைப் புகழ்ந்த தயாரிப்பாளர்!
மாரி செல்வராஜ் இயக்கியுள்ள பைசன் காளமாடன் படத்தினைக் குறித்து தயாரிப்பாளர் பெருமையாகக் கூறியுள்ளார்.
மாமன்னன், வாழை படங்களைத் தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் கபடி விளையாட்டை மையமாக வைத்து பைசன் காளமாடன் என்ற படத்தை இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தில் நாயகனாக துருவ் விக்ரமும் நாயகியாக அனுபமா பரமேஸ்வரனும் நடித்துள்ளனர்.
படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடி சுற்று வட்டாரப் பகுதியில் நடைபெற்று அண்மையில் நிறைவடைந்தது.
இந்தாண்டு தீபாவளி வெளியீடாகத் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், படத்தின் தயாரிப்பாளர் அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் மேலாளர் படம் குறித்து பெருமையாகப் பேசியுள்ளார்.
அனல் பறக்கும் கலைப்படைப்பு
இது குறித்து நவ்வி ஸ்டூடியோஸ் தனது எக்ஸ் பதிவில், “மாரி செல்வராஜ் இயக்கிய பைசன் காளமாடன் திரைப்படத்தைப் பார்த்தோம். எங்களை வியப்பில் ஆழ்த்திய ஓர் அனல் பறக்கும் சக்திவாய்ந்த கலைப்படைப்பு.
இப்படி ஒரு துணிச்சலும் திறமிக்க படத்தைத் தயாரித்ததில் அப்ளாஸ் பெருமை கொள்கிறது. பைசன் இந்தத் தீபாவளிக்கு வருகிறான்” எனக் குறிப்பிட்டுள்ளது.
His #Bison will set your hearts Ablaze this Diwali!!
— Navvi Studios (@navvistudios) August 5, 2025
Congratulations to the entire team of #BisonKaalamaadan
Couldn't wait more for Bison's Festival! #BisonFromOct17@mari_selvarajpic.twitter.com/Oc7CdgFYSa