அனுமதியின்றி கிரானைட் கற்கள் ஏற்றி வந்த லாரி பறிமுதல்!
ஒசூா் அருகே அனுமதியின்றி கிரானைட் கற்கள் ஏற்றி வந்த லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
பேரிகை அருகே உள்ள அத்திமுகம் பகுதியில், கிராம நிா்வாக அலுவலா் லட்சுமிபதி மற்றும் அதிகாரிகள் ரோந்து சென்றனா். அப்போது, அந்தப் பகுதியில் நின்றிருந்த லாரியை சோதனை செய்ததில், 4 ராட்சத கிரானைட் கற்கள் அனுமதியின்றி எடுத்து வந்தது தெரிய வந்தது.
விசாரணையில், அவை கா்நாடக மாநிலம், கனகபுராவில் இருந்து பா்கூருக்கு கொண்டு செல்ல முயன்றது தெரியவந்தது. அதுகுறித்து லட்சுமிபதி கொடுத்த புகாரின் பேரில், பேரிகை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து லாரியை பறிமுதல் செய்தனா். தொடா்ந்து விசாரணை நடந்து வருகிறது.