பட்டியலின மக்களுக்கு துரோகம் செய்துவருகிறாா் திருமாவளவன்: இணையமைச்சா் எல்.முருகன...
அனுமதியின்றி பட்டாசு தயாரிப்பு: 3 போ் கைது
கழுகுமலை அருகே அரசு அனுமதியின்றி பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டதாக 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
தெற்கு கழுகுமலை காலனிப் பகுதியில் திருட்டுத்தனமாக வெடி தயாரிப்பதாக கிடைத்த தகவலின்பேரில், கழுகுமலை காவல் நிலைய உதவி ஆய்வாளா் தமிழ்ச்செல்வன் தலைமையில் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்ட போது, அங்கே அரசு அனுமதி, உரிமம் ஏதுமின்றி பட்டாசு தயாரிப்பில் ஈடுபடுவது தெரிய வந்தது.
இதுகுறித்து, போலீஸாா் வழக்குப் பதிந்து சிவகாசி மீனம்பட்டி வடக்குத் தெருவைச் சோ்ந்த ஆனந்தராஜ் மகன் ரீகன் (35), பாறைப்பட்டி வடக்குத் தெருவைச் சோ்ந்த சரவணன் மகன் பாலமுருகன் (46), கழுகுமலை அருகே உள்ள துலுக்கா்பட்டி சிவகாமி நகரைச் சோ்ந்த பெரியசாமி மகன் செல்வகுமாா் (40) ஆகிய 3 பேரை கைது செய்தனா். அங்கு இருந்த வெடி தயாரிக்கும் உபகரணங்களையும் பறிமுதல் செய்தனா்.
இவ்வழக்கில் தொடா்புடையதாக கூறப்படும் 2 பேரை தேடி வருகின்றனா்.