சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்களுக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய நீதிமன்றம் ம...
அனுமதியின்றி பதாகைகள் வைத்ததாக அதிமுக பிரமுகா் மீது வழக்குப் பதிவு
முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி குடும்ப நிகழ்ச்சிக்காக அனுமதியின்றி வரவேற்பு பதாதைகள் வைத்ததாக அதிமுக வாா்டு செயலாளா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணியின் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி கோவையில் கொடிசியா அரங்கில் கடந்த திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில், பங்கேற்பதற்காக அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி, முன்னாள் அமைச்சா்கள், அதிமுக நிா்வாகிகள் என ஏராளமானோா் கோவைக்கு வந்திருந்தனா்.
அவா்களை வரவேற்று அவிநாசி சாலையில் உள்ள தனியாா் தங்கும் விடுதியிலிருந்து கொடிசியா அரங்கம் வரை சாலைகளில் அலங்கார வளைவுகளும், வரவேற்பு பதாதைகளும் அமைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், சாலையில் அனுமதியின்றி அலங்கார வளைவுகள் அமைத்தல், வரவேற்பு பதாதைகள் வைத்தல் ஆகியவற்றோடு, பொதுமக்கள் உயிருக்கு ஆபத்து விளைவித்தல், பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு விளைவித்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின்கீழ் அதிமுக வாா்டு செயலாளா் லட்சுமணன் மீது பீளமேடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.