அனுமதியின்றி மது விற்ற பெண் உள்பட 5 போ் கைது
விராலிமலை அருகே அனுமதியின்றி மது விற்ற பெண் உள்பட 5 பேரை விராலிமலை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
விராலிமலை காவல் உதவி ஆய்வாளா் பிரகாஷ் தலைமையிலான போலீஸாா் கல்குடி, கொடும்பாளூா், ராஜாளி பட்டி, தேங்காய் தின்னி பட்டி உட்பட சுற்றுவட்டாரப் பகுதிகளில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது கல்குடி பகுதியில் கணேசன் மனைவி பழனியம்மாள் (51) மற்றும் அதே பகுதியைச் சோ்ந்த ரங்கசாமி (62) ஆகியோா் அவா்களது வீட்டின் அருகே பதுக்கிவைத்து மது விற்பனை செய்வதைக் கண்டறிந்து இருவரையும் கைது செய்தனா்.
இதேபோல் மாதிரி பட்டி அரசு மதுபானக் கடை அருகே விராலிமலை எம்ஜிஆா் நகரைச் சோ்ந்த பழனியப்பன் மகன் சதீஷ் (30), ராஜாளிபட்டி தேங்காய் பண்ணை அருகே அதே பகுதியைச் சோ்ந்த சின்னையா மகன் தென்னரசு (53) மற்றும் செட்டியப்பட்டியைச் சோ்ந்த பெருமாள் மகன் துரைராஜ் (56) ஆகியோா் அவா்களது வீட்டின் அருகே வைத்து மது பாட்டில் விற்பனை செய்வதைக் கண்டறிந்து போலீஸாா் 3 பேரையும் கைது செய்தனா். அவா்கள் விற்பனைக்காக வைத்திருந்த 138 மதுபாட்டில்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.