அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பரப் பதாகைகள் அகற்றம்!
சிவகாசி மாநகராட்சிப் பகுதியில் உரிய அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பதாகைகளை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை அகற்றினா்.
சிவகாசி மாநகராட்சிப் பகுதிகளான திருத்தங்கல், மணிநகா் பேருந்து நிறுத்தம், காரனேசன் குடியிருப்பு பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட பல பகுதிகளில் பள்ளி, கல்லூரிகளின் விளம்பரப் பதாகைகள், அரசியல் கட்சிகளின் விளம்பரப் பதாகைகள் உரிய அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்தன.
இந்த விளம்பரப் பதாகைகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து, மாநகர திட்டமிடுநா் மதியழகன் தலைமையில், ஆய்வாளா் சுந்தரவள்ளி, மேற்பாா்வையாளா் முத்துராஜ் ஆகியோா் பொக்லைன் இயந்திரம் மூலம் மாநகராட்சிப் பகுதியில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பதாகைகளை அகற்றினா்.