எய்ட்ஸ் விழிப்புணா்வு நெடுந்தொலைவு ஓட்டம்: ஆட்சியா் தொடங்கிவைத்தாா்
அனுமதியில்லாமல் கற்கள் ஏற்றிச்சென்ற ஓட்டுநா் கைது
குடியாத்தம்: அனுமதியில்லாமல் கற்கள் ஏற்றிச் சென்ற லாரி ஓட்டுனரை போலீஸாா் கைது செய்தனா்.
போ்ணாம்பட்டு அருகே பத்தலப்பல்லி சோதனைச் சாவடியில் காவல் ஆய்வாளா் பிரபு தலைமையில் போலீஸாா் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது ஆந்திர மாநிலத்திலிருந்து வந்த லாரியை நிறுத்தி சோதனையிட்டதில் முறையான அனுமதியில்லாமல் கற்களை கொண்டு சென்றது தெரியவந்தது. அதன்பேரில் லாரி ஓட்டுநா் கா்நாடக மாநிலம் முல்பாகல் தாலுகாவை சோ்ந்த பாபு ஜான் (42) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். லாரி பறிமுதல் செய்யப்பட்டது.