அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழுக்களுடன் வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி விரைவில் ஆலோசனை!
பயங்கரவாதத்துக்கு எதிரான இந்திய நிலைப்பாட்டை உலக நாடுகளுக்கு எடுத்துரைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, 7 எம்.பி.க்கள் தலைமையில் அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் அடங்கிய குழுக்களை வெளிநாடுகளுக்கு மத்திய அரசு அனுப்பவுள்ளது.
இந்த நிலையில், அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் அடங்கிய குழுவினருக்கு வரும் 21, 23 ஆகிய நாள்களில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைகளைப் பற்றியும் பயங்கரவாதத்துக்கு எதிரான இந்திய நிலைப்பாடு பற்றியும் நாடாளுமன்றத்தில் விரிவாக விளக்கமளிக்கவுள்ளார் வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி.
முதல்கட்டமாக வெளிநாடுகளுக்குச் செல்லும் 3 குழுக்களைச் சேர்ந்த எம்.பி.க்களுக்கு மே 21-ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாக வெளிநாடுகளுக்குச் செல்லும் 4 குழுக்களைச் சேர்ந்த எம்.பி.க்களுக்கு மே 23-ஆம் தேதியும் விளக்கமளிக்கவுள்ளார்.