செய்திகள் :

அனைத்து சுங்கச்சாவடிகளிலும் கழிவறை வசதிகள்: மக்களவையில் மத்திய அரசு தகவல்

post image

தூய்மை பாரதம் திட்டத்தின் ஒரு பகுதியாக நெடுஞ்சாலைகளில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளுக்கு அருகில் கழிவறைகள் கட்டித் தரப்பட்டுள்ளதாக மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மக்களவையில் இது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை வழங்கிய தகவலைக் கொண்டு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் திங்கள்கிழமை எழுத்துமூலம் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:

தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் சுங்கச் சாவடிகளுக்கு அருகில் கழிவறைகளைக் கட்டுவதைப் பொறுத்தவரை, தூய்மை பாரதம் திட்டத்தின் கீழ் கடந்த 2015ஆம் ஆண்டு முதல் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் அதிகாரத்துக்கு உட்பட்ட பகுதிகளில் சுங்கச்சாவடிகளுக்கு அருகில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனியாக கழிவறைகள் கட்டித் தரப்பட்டுள்ளன. நெடுஞ்சாலைகளில் கழிவறை உள்ளிட்டவை தொடர்பாக ஏதாவது பிரச்னை இருந்தால் அது பற்றி புகார் அளிக்க ராஜமார்க் யாத்ரா என்ற செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் ஒன் செயலியில் சுங்கச்சாவடிகளுக்கு அருகில் உள்ள 1,300 கழிவறைகளின் விவரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சுங்கச்சாவடிகளை நடத்தவதற்கு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ள அமைப்புகளிடம் கழிவறைகளின் தூய்மை தொடர்பாகவும் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டுள்ளது. உரிய கழிவறை வசதிகளை செய்து தராத அமைப்புகளிடம் இருந்து தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் மாதத்துக்கு ரூ. 1 லட்சம் வரை அபராதம் விதிக்க முடியும். அவ்வகையில் இதுவரை ரூ. 46 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தேசிய நெடுஞ்சாலைகளில் 40-60 கி.மீ. இடைவெளிக்கு ஒன்று என்ற அடிப்படையில் கழிவறைகள் உள்ளிட்ட சாலையோர வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

அவ்வகையில் ராஜஸ்தானில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் அதிகபட்சமாக 58 கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. அதைத் தொடர்ந்து ஹரியாணா மற்றும் மத்திய பிரதேசம் (48), குஜராத் (45), உத்தர பிரதேசம் (44), பஞ்சாப் (35), ஆந்திர பிரதேசம் (34) என்ற எண்ணிக்கையில் கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன என்று சிவராஜ் சிங் சௌஹான் தனது பதிலில் தெரிவித்துள்ளார்.

நாட்டின் வளா்ச்சிப் பயணத்தில் விவசாயிகளின் பங்கு அளப்பரியது: ஜகதீப் தன்கா்

ஜெய்பூா்: வளர்ச்சியை நோக்கிய பயணத்தில் விவசாயிகளின் பங்கு அளப்பரியது என்றும் வேளாண் அறிவியல் மையங்களை விவசாயிகள் பயன்படுத்திப் பலன் அடைய வேண்டும் என குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் தெரிவித்தார... மேலும் பார்க்க

மோடி அமெரிக்காவுக்குச் சென்றுவந்த பிறகு தில்லி முதல்வர் பதவியேற்பு விழா?

பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்குச் சென்று வந்த பிறகு தில்லி முதல்வர் பதவியேற்பு விழா நடைபெறும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.பிப். 12, 13 ஆகிய தேதிகளில் பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு அரசுமுறைப் பயண... மேலும் பார்க்க

தில்லி முதல்வர் யார்? அமித் ஷாடன் நட்டா சந்திப்பு!

தில்லியில் மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷாவை பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா நேரில் சந்தித்தார். தில்லி புதிய முதல்வரை தேர்வு செய்வது குறித்து இதில் ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. பாஜக விரைவில் அ... மேலும் பார்க்க

தில்லியில் ஆட்சி அமைத்ததும் பாஜகவின் முதல் திட்டம்!

தில்லியில் முறையாக ஆட்சி அமைத்ததும் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில், மாநிலத்திலுள்ள ஊழல் வழக்குகளை ஆராய சிறப்பு விசாரணைக் குழு அமைக்க பாஜக திட்டமிட்டுள்ளது. நடைபெற்றுமுடிந்த தில்லி சட்டப் பேரவைத் தோ்தல... மேலும் பார்க்க

2026-ல் மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி: தர்மேந்திர பிரதான்

2026-ல் நடைபெறவுள்ள மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக ஆட்சி அமைக்கும் என மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று (பிப். 9) தெரிவித்தார். இது குறித்து கொல்கத்தாவில் செய்தியாளர்களுட... மேலும் பார்க்க

மணிப்பூர் முதல்வர் ராஜிநாமா!

மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் தனது பதவியை ராஜிநாமா செய்தார். தனது ராஜிநாமா கடிதத்தை ஆளுநர் அஜய்குமார் பல்லாவிடம் வழங்கினார். மேலும் பார்க்க