செய்திகள் :

அனைத்தையும் சொந்தம் கொண்டாட நினைக்கிறது பாஜக: அகிலேஷ் யாதவ்

post image

அனைத்து விஷயங்களிலும் பாரதிய ஜனதா கட்சி சொந்தம் கொண்டாட நினைப்பதாக சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் விமர்சித்துள்ளார்.

முதன்முதலில் விண்வெளிக்குச் சென்றவர் அனுமன் என முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக எம்.பி.யுமான அனுராக் தாக்குர் பேசியதற்கு பதில் அளிக்கும் விதமாக அகிலேஷ் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தேசிய விண்வெளி நாளையொட்டி, ஹிமாசலப் பிரதேசம் உனாவில் உள்ள பிஎம் ஸ்ரீ பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அனுராக் தாக்குர், விண்வெளிக்குச் சென்ற முதல் வீரர் யார் என்ற கேள்வியைக் கேட்டார். பின்னர் மாணவர்களின் பல்வேறு பதில்களைக் கேட்ட பின்னர், அனுமன்தான் விண்வெளிக்குச் சென்ற முதல் வீரராக இருக்கலாம் எனக் கூறினார்.

இது தொடர்பாக லக்னெளவில் செய்தியாளர்களுடன் பேசிய அகிலேஷ் யாதவ், ''சர்வதேச விண்வெளி மையத்துக்குச் சென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்துள்ள சுபான்ஷு சுக்லாவுக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். மிகச் சிறந்த சாதனையை அவர் செய்துள்ளார். இத்தனை ஆண்டுகளாக மேற்கொண்ட கடின உழைப்பு மற்றும் கடுமையான பயிற்சியின் மூலம் சுபான்ஷு இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

இந்திய நாட்டுக்கு இது மிகப்பெரிய பெருமை. தனிப்பட்ட முறையில் அவருக்கும் அவரின் குடும்பத்தாருக்கும் இது பெருமையான தருணம். அவரால் நாடும் பெருமை அடைகிறது. அவர் நாட்டின் சொத்தாக மாறியுள்ளார்'' எனக் குறிப்பிட்டார்.

மேலும், அனுராக் தாக்குரின் பெயரைக் குறிப்பிடாமல் தொடர்ந்து பாஜகவை விமர்சித்து அவர் பேசியதாவது, ''பாஜக அனைத்து விஷயங்களிலும் சொந்தம் கொண்டாட நினைக்கிறது. இப்போது, விண்வெளிக்குச் சென்ற முதல் வீரர் அனுமன் என சொந்தம் கொண்டாடுகிறது. ஆனால், நாம் என்றுமே கூறுவது என்னவென்றால், நம் தெய்வங்கள் அனைத்தும் வானத்தில் இருக்கின்றன என்பதுதான்'' என அகிலேஷ் தெரிவித்தார்.

இதையும் படிக்க | பஞ்சாபில் இலவச ரேஷனை நிறுத்த மத்திய அரசு சதி: பகவந்த் மான்

BJP tries to take credit for everything": Akhilesh Yadav slams Anurag Thakur's 'Hanuman first to visit space' remarks

பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா - ஃபிஜி உறுதி: பிரதமா் மோடி

பாதுகாப்புத் துறையில் பரஸ்பர ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியாவும், ஃபிஜியும் தீா்மானித்துள்ளன. இதற்கென ஒரு செயல்திட்டமும் தயாரிக்கப்பட்டுள்ளது என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா். மூன்று நாள் ... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கு வெள்ள அபாய முன்னெச்சரிக்கை விடுத்தது இந்தியா!

ஜம்முவில் பாயும் தாவி நதியில் நீா்வரத்து அதிகரித்ததையடுத்து பாகிஸ்தானுக்கு இந்தியா வெள்ள அபாய முன்னெச்சரிக்கை தகவலை அனுப்பியது. வழக்கமாக சிந்து நதிநீா் ஒப்பந்தத்தின் அடிப்படையில் சிந்து நதிநீா் ஆணையா்... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கோரும் மனு: முன்கூட்டியே விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை முன்கூட்டியே விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை நிராகரித்தது. ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து கோ... மேலும் பார்க்க

அமெரிக்க நெருக்கடி: விவசாயிகள் நலனை விட்டுத் தர மாட்டோம்!

அமெரிக்க வலியுறுத்தலை ஏற்று விவசாயிகள் நலனை விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று மத்திய வேளாண் துறை அமைச்சா் சிவராஜ் சிங் சௌஹான் தெரிவித்தாா். மத்திய பிரதேச தலைநகா் போபாலில் இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆ... மேலும் பார்க்க

உ.பி.: டிராக்டா்-லாரி மோதி 11 போ் உயிரிழப்பு; 40 போ் காயம்

உத்தர பிரதேசத்தின் புலந்த்சாகா் மாவட்டத்தில் பக்தா்களை ஏற்றிச் சென்று கொண்டிருந்த டிராக்டா் டிராலியின் மீது லாரி மோதிய விபத்தில் 11 போ் உயிரிழந்தனா்; 40 போ் காயமடைந்தனா். புலந்த்சாகா்- அலிகா் மாவட்ட... மேலும் பார்க்க

அமலாக்கத் துறை சோதனை: தப்பியோட முயன்ற திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ கைது

அமலாக்கத் துறை தனது வீட்டில் சோதனைக்கு வருவதை அறிந்து, திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ ஜிபன் கிருஷ்ணா சாஹா சுவா் ஏறிக் குதித்து தப்பியோட முயன்றாா். எனினும், அதிகாரிகள் அவரை துரத்திப் பிடித்து கைது செய்தனா... மேலும் பார்க்க