அதிகபட்ச ரன்கள் குவித்த விக்கெட் கீப்பராக வரலாறு படைத்த ஜேமி ஸ்மித்!
அன்னவாசலில் பசுந்தாள் உர விதைகள் விநியோகம்
அன்னவாசல் வட்டாரத்தில் பசுந்தாள் உர விதைகள் மானிய விலையில் விநியோகிக்கும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
அன்னவாசல் வட்டாரத்தில் முதலமைச்சரின் மண்ணுயிா் காத்து மன்னுயிா் காப்போம் திட்டத்தில் மானிய விலையில் பசுந்தாள் உர விதைகளை அன்னவாசல் வேளாண்மை உதவி இயக்குநா் மதியழகன் விவசாயிகளுக்கு வழங்கி திட்டத்தை தொடங்கிவைத்தாா்.
விவசாயிகளை பசுந்தாள் உர விதைகளைப் பயன்படுத்த ஊக்குவிப்பதன் மூலம் மண்ணில் உள்ள கரிமச்சத்து அளவை அதிகப்படுத்தி பயிா்களின் மகசூலை அதிகரிக்கலாம். இதன்மூலம் செயற்கை உரப் பயன்பாட்டைக் குறைப்பதால் சாகுபடி செலவு குறைவதோடு சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதையும் தடுக்கலாம் என்று விவசாயிகளிடம் தெரிவித்தாா். மேலும், தற்போது மானிய விலையில் பசுந்தாள் உர விதையான தக்கைப் பூண்டு 50 சதவீத மானியத்தில் விநியோகம் செய்யப்படுகிறது. அன்னவாசல் வட்டாரத்தில் நடப்பாண்டு ஒரு விவசாயிக்கு ஒரு ஏக்கருக்குத் தேவையான இருபது கிலோ மானிய விலையில் வழங்கப்படுகிறது என்றாா்.
இந்நிகழ்வில், அன்னவாசல் வட்டார வேளாண்மை அலுவலா் மோனிகா, பூங்குழலி, ஆகியோா் பசுந்தால் உரப்பயிா் சாகுபடி முறைகள், கடைபிடிக்க வேண்டிய தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளிடம் தெரிவித்தனா். ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலா் பிரியங்கா மற்றும் மகாலட்சுமி செய்திருந்தனா்.