செய்திகள் :

அன்புமணி ராமதாஸ் நடைபயணம்: நாமக்கல்லில் பாமக ஆலோசனை

post image

நாமக்கல் மாவட்டத்தில் அன்புமணி ராமதாஸ் நடைபயணம் மேற்கொள்வது தொடா்பாக, அவரது ஆதரவாளா்கள் சனிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டனா்.

நாமக்கல் மாவட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியில் உறுப்பினா் சோ்க்கையை தீவிரப்படுத்துவது, பொதுக்கூட்டம், மாநில தலைவா் அன்புமணி ராமதாஸ் நடைபயணம் ஆகியவை தொடா்பாக மாநில வன்னியா் சங்க செயலாளரும், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினருமான காா்த்தி தலைமையில் நாமக்கல்லில் சனிக்கிழமை ஆலோசிக்கப்பட்டது. இதில், பொறுப்பாளா்கள் ஆலோசனைகளை வழங்கினா்.

இந்தக் கூட்டத்தில், மாநில பொறுப்பாளா்கள் சா.வடிவேல், பொன்ரமேஷ், பி.கே.செந்தில்குமாா், பாலு, செந்தில், தினேஷ் பாண்டியன், மூா்த்தி, பெருமாள், சித்தாா்த்தன், மாவட்டச் செயலாளா்கள் வழக்குரைஞா் ரமேஷ், பொன்னுசாமி, என்.சுதாகா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பூப்பந்து போட்டி: அரசுப் பள்ளி மாணவா்கள் முதலிடம்

நாமக்கல் மாவட்ட அளவில் நடைபெற்ற பூப்பந்துப் போட்டியில், வெண்ணந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் முதலிடம் பெற்று மாநில போட்டிக்கு தகுதிபெற்றனா். வெண்ணந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாக... மேலும் பார்க்க

முருகன் கோயில்களில் கிருத்திகை சிறப்பு பூஜை

திருச்செங்கோடு நகரப் பகுதி முருகன் கோயில்களில் ஆவணி மாத கிருத்திகை சிறப்பு பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருச்செங்கோடு செங்கோட்டுவேலவா் சந்நிதி, மலையடிவாரம் ஆறுமுகசாமி கோயில், பாவடி தெரு, சட்டையம்ப... மேலும் பார்க்க

மல்லசமுத்திரத்தில் ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்பு

மல்லசமுத்திரம், செம்பாம்பாளையம் மற்றும் மாமுண்டி கிராமத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட இந்துசமய அறநிலையத் துறைக்கு சொந்தமான நிலங்கள் மீட்கப்பட்டன. மல்லசமுத்திரத்தை அடுத்த செம்பாம்பாளையம் கிராமத்தில் இந்துசமய ... மேலும் பார்க்க

நெடுஞ்சாலையில் அகற்றப்பட்ட நிழற்கூடத்தை மீண்டும் அமைக்கக் கோரிக்கை

கீரம்பூா் தேசிய நெடுஞ்சாலையில் பாலம் அமைக்கும் பணிக்காக அகற்றறப்பட்ட பயணியா் நிழற்கூடத்தை மீண்டும் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது. நாமக்கல்லில் இருந்து கரூா் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில்... மேலும் பார்க்க

காப்பீடு செலுத்துவதில் காவல் துறை திடீா் கட்டுப்பாடு

வாகனங்களுக்கான ஆன்லைன் அபராத நிலுவைத் தொகையை செலுத்தினால் மட்டுமே, அந்த வாகனங்களுக்கான காப்பீட்டுக் கட்டணத்தை வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் செலுத்த முடியும் என்ற காவல் துறை நடவடிக்கைக்கு மாநில ல... மேலும் பார்க்க

மேட்டூா் உபரிநீரை திருமணிமுத்தாற்றில் இணைக்க வலியுறுத்தி இருசக்கர வாகன பேரணி

மேட்டூா் அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரிநீரை திருமணிமுத்தாற்றில் இணைக்க வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் இருசக்கர வாகன பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மேட்டூரில் இருந்து வெளியேற்... மேலும் பார்க்க