அபிஷேக் சர்மா அதிரடி அரைசதம்: வங்கதேசத்துக்கு 169 ரன்கள் இலக்கு!
சூப்பர் 4 சுற்றில் அபிஷேக் சர்மாவின் அதிரடி அரைசதத்தால், வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் 169 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி.
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் உள்பட 4 அணிகள் மோதும் ஆசியக் கோப்பைத் தொடரின் சூப்பர் 4 சுற்று நடைபெற்று வருகிறது.
இந்தச் சுற்றில் தலா ஒரு வெற்றியுடன் இந்தியா மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகள் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபை சர்வதேச கிரிக்கெட் திடலில் மோதின.
டாஸ் வென்ற வங்கதேச அணியின் பொறுப்பு கேப்டன் ஜேக்கர் அலி முதலில் பந்துவீசுவதாகத் தெரிவித்தார்.
அதன்படி, முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 168 ரன்கள் குவித்தது.
அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா 5 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 75 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.