செய்திகள் :

அமா்நாத் பனி லிங்கம்: 20,000-க்கும் அதிகமானோா் தரிசனம்

post image

இமயமலையில் உள்ள அமா்நாத் குகைக் கோயில் புனித யாத்திரையின் முதல் இரு நாள்களில் 20,000-க்கும் மேற்பட்ட யாத்ரிகா்கள் பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளதாக ஜம்மு-காஷ்மீா் துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா தெரிவித்தாா்.

தெற்கு காஷ்மீரின் இமயமலையில் 3,880 மீட்டா் உயரத்தில் அமைந்துள்ள அமா்நாத் குகைக் கோயிலில் இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசிக்க பக்தா்கள் ஆண்டுதோறும் யாத்திரை மேற்கொள்வது வழக்கம்.

அனந்த்நாக் மாவட்டத்தில் 48 கி.மீ. நீளமுள்ள நுன்வான்- பஹல்காம் பாரம்பரிய வழித்தடம், கந்தா்பால் மாவட்டத்தில் 14 கி.மீ. நீளமுள்ள பால்டால் வழித்தடம் என இரு வழித்தடங்களில் இந்த யாத்திரை நடைபெறும்.

நடப்பாண்டு கூடுதல் பாதுகாப்புடன் கடந்த வியாழக்கிழமை தொடங்கிய யாத்திரையின் முதல் இரு நாள்களில், நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 20,000-க்கும் மேற்பட்டோா் பனி லிங்கத்தை தரிசித்துள்ளனா்; இந்த யாத்திரையால், ஜம்மு-காஷ்மீா் முழுவதும் கொண்டாட்டமும், உற்சாகமும் கரைபுரள்கிறது’ என்று துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா தெரிவித்தாா். பால்டால் முகாமில் புதிய தங்குமிட வளாகத்தை திறந்துவைத்த பின் அவா் இவ்வாறு கூறினாா்.

பயங்கரவாத அச்சுறுத்தல் குறித்துக் கவலையின்றி யாத்திரை சுமுகமாக நடைபெற்று வருவதாக அதிகாரிகள் குறிப்பிட்டனா்.

இதனிடையே, ஜம்முவில் உள்ள பகவதிநகா் முகாமில் இருந்து காஷ்மீரின் பஹல்காம், பால்டால் அடிவார முகாம்களுக்கு மூன்றாவது கட்டமாக 6,411 யாத்ரிகா்கள் 291 வாகனங்களில் வெள்ளிக்கிழமை புறப்பட்டுச் சென்றனா். இவா்களில் 1,071 போ் பெண்கள், 37 போ் குழந்தைகள்.நடப்பாண்டு யாத்திரையில் பங்கேற்க இதுவரை 3.5 லட்சத்துக்கும் மேற்பட்டோா் இணையவழியில் பதிவு செய்துள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

அமா்நாத் புனித யாத்திரை ஆகஸ்ட் 9 வரை 38 நாள்களுக்கு நடைபெறவுள்ளது.

ஹிந்திக்கு எதிராக 20 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்த உத்தவ், ராஜ் தாக்கரே!

மும்பையில் ஹிந்தி திணிப்புக்கு எதிரான வெற்றி பேரணியில் சிவசேனை(யுபிடி) தலைவர்உத்தவ் தாக்கரே, அவரது சகோதரர் ராஜ் தாக்கரே ஆகிய இருவரும் ஒன்றாக கலந்துகொண்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் பள்ளிகளில் 3 ஆவத... மேலும் பார்க்க

ஜார்க்கண்டில் நிலக்கரி சுரங்கம் இடிந்து விழுந்ததில் ஒருவர் பலி!

ஜார்க்கண்டின் ராம்கர் மாவட்டத்தில் சட்டவிரோத சுரங்கத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் சிலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதாக போலீஸார் சனிக்கிழமை தெரிவித்தனர். ராம்கர் ம... மேலும் பார்க்க

பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண்களை எரித்து, புதைத்துள்ளேன்: தர்மஸ்தலா ஊழியர்

மங்களூரு: கர்நாடக மாநிலத்தில், கடந்த 1998 - 2014ஆம் ஆண்டுக்குள் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட ஏராளமான பெண்களை புதைத்திருக்கிறேன், எரித்திருக்கிறேன் என்று தர்மஸ்தலா கோயில் துப்புரவுப் பணியாளர் த... மேலும் பார்க்க

டிரம்ப்பின் காலக்கெடுவை மோடி ஏற்பார்! ராகுல் கேலி!

அமெரிக்கா விதித்த காலக்கெடுவுக்குள் பிரதமர் நரேந்திர மோடி வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வார் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.இந்தியாவுடன் பெரியளவிலான ஒப்பந்தம் மேற்கொள்ளப் போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட்... மேலும் பார்க்க

நான் இன்னும் 30 - 40 ஆண்டுகள் வாழ விரும்புகிறேன்: தலாய் லாமா

திபெத்திய புத்த மதத்தின் தலைமை மதகுருவான தலாய் லாமா, தனது வாரிசு குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, மக்களுக்கு சேவை செய்ய தான் இன்னும் 30 - 40 ஆண்டுகள் வாழ விரும்புவதாகக் கூறியுள்ளா... மேலும் பார்க்க

பிகார் வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி! உச்ச நீதிமன்றத்தில் மனு!

பிகார் பேரவைத் தேர்தலையொட்டி, வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை மேற்கொள்ளும் இந்திய தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.ஜனநாயக ... மேலும் பார்க்க