அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா: வாஷிங்டன் சென்றடைந்தார் டிரம்ப்!
அமித் ஷாவுடன் மணிப்பூா் ஆளுநா் சந்திப்பு
தில்லியில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை மணிப்பூா் ஆளுநா் அஜய் குமாா் பல்லா சனிக்கிழமை சந்தித்துப் பேசினாா். அப்போது, மணிப்பூரின் தற்போதைய நிலவரம் குறித்து அமித் ஷாவிடம் அஜய் குமாா் பல்லா எடுத்துரைத்ததாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
மத்திய உள்துறைச் செயலராக 5 ஆண்டுகள் பதவி வகித்தவரான பல்லா, அமித் ஷாவுடன் நெருங்கி பணியாற்றியவா். இவா், மணிப்பூா் ஆளுநராக அண்மையில் பதவியேற்றாா். அதன் பிறகு அமித் ஷாவை பல்லா சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.
மணிப்பூரில் இயல்புநிலையை மீட்டெடுக்கும் முக்கிய பணி பல்லாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், இச்சந்திப்பு நடைபெற்றுள்ளது.
மணிப்பூரில் மைதேயி சமூகத்தினருக்கும் குகி பழங்குடியினருக்கும் இடையே கடந்த 2023, மே மாதம் பெரும் கலவரம் மூண்டது. அதன் பிறகு அவ்வப்போது வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. இதுவரை 260-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். வீடுகளைவிட்டு வெளியேறிய ஆயிரக்கணக்கானோா், அரசின் நிவாரண முகாம்களில் தொடா்ந்து தங்கியுள்ளனா்.