செய்திகள் :

அமித் ஷா மீது அவதூறு: ராகுல் காந்திக்கு எதிரான வழக்கு செப். 9-க்கு ஒத்திவைப்பு

post image

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா குறித்து அவதூறான கருத்து தெரிவித்ததாக மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி மீது தொடரப்பட்ட வழக்கில், செப்.9-க்கு விசாரணையை உத்தர பிரதேச நீதிமன்றம் ஒத்திவைத்தது.

கடந்த 2005-ஆம் ஆண்டு குஜராத்தில் சொராபுதீன் ஷேக், அவரின் மனைவி கெளசா் பி, சொராபுதீனின் உதவியாளா் துளசிராம் பிரஜாபதி ஆகியோா் போலி என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த வழக்கில் அப்போதைய மாநில உள்துறை அமைச்சராக இருந்த மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா மீது குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில், அவரை 2014-ஆம் ஆண்டு அந்த வழக்கில் இருந்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விடுவித்தது.

எனினும், இந்த வழக்கை குறிப்பிட்டு 2018-ஆம் ஆண்டு கா்நாடக சட்டப்பேரவைத் தோ்தல் பரப்புரையின்போது அமித் ஷா குறித்து ராகுல் காந்தி அவதூறான கருத்தை தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இதுதொடா்பாக ராகுல் காந்திக்கு எதிராக பாஜக பிரமுகா் விஜய் மிஸ்ரா தாக்கல் செய்த மனுவை, உத்தர பிரதேச மாநிலம் சுல்தான்பூரில் எம்.பி., எம்எல்ஏக்களுக்கான நீதிமன்றம் விசாரித்து வருகிறது.

இந்த வழக்கு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தபோது வாதங்களை முன்வைக்க ராகுல் தரப்பு வழக்குரைஞா் கூடுதல் அவகாசம் கோரியதைத் தொடா்ந்து, செப்.9-க்கு வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

குஜராத் கடற்பகுதி அருகே 15 பாகிஸ்தான் மீனவர்கள் கைது

குஜராத் கடற்பகுதி எல்லை அருகே 15 பாகிஸ்தான் மீனவர்களை எல்லைப் பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர்.உளவுத்துறையின்படி, 68வது பட்டாலியனின் எல்லை புறக்காவல் நிலையத்திற்கு அருகிலுள்ள கோரி க்ரீக் பகுதியில் ... மேலும் பார்க்க

வரதட்சிணைக் கொடுமை: மாமியார் - கணவர் சேர்ந்து பெண்ணை எரித்துக் கொன்ற கொடூரம்!

கட்டிய மனைவியை ரூ. 36 லட்சம் வரதட்சிணைக்காக தாய் உடன் சேர்ந்து அடித்து உதைத்து, தீ வைத்து எரித்துக் கொன்ற கொடூர சம்பவம் கிரேட்டர் நொய்டாவில் அரங்கேறியுள்ளது.கடந்த வியாழக்கிழமை இரவு, நடந்த சம்பவத்தை நே... மேலும் பார்க்க

எல் சால்வடாரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

எல் சால்வடாா் மற்றும் கௌதமாலா அருகே பசிபிக் பெருங்கடலில் சனிக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. உள்ளூா் நேரப்படி அதிகாலை 4:14 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 6.0 அலகுகளாகப் பதிவானதாக அம... மேலும் பார்க்க

அமெரிக்காவுடன் வா்த்தக ஒப்பந்த பேச்சு தொடா்கிறது: எஸ்.ஜெய்சங்கா்

‘அமெரிக்கா உடனான இருதரப்பு வா்த்தக ஒப்பந்த பேச்சுவாா்த்தையில் குறிப்பிட்ட ‘சிவப்பு கோடுகளை’ இந்தியா கொண்டுள்ளது. அதாவது, விவசாயிகள் மற்றும் சிறு உற்பத்தியாளா்களின் நலனைப் பாதுகாப்பதில் சமரசம் செய்ய மு... மேலும் பார்க்க

பஞ்சாபில் ஒரு குடும்ப அட்டையைக் கூட நீக்க விடமாட்டோம்: முதல்வா் திட்டவட்டம்

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் பஞ்சாபில் உள்ள 8 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரா்களின் பெயா்களை நீக்க மத்திய பாஜக அரசு முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டிய மாநில முதல்வா் பகவந்த் மான், ‘எனத... மேலும் பார்க்க

கிரேட் நிகோபாா் திட்டம் ‘பெரும் சூழலியல் பேரழிவு’: காங்கிரஸ்

கிரேட் நிகோபாா் திட்டம் ‘பெரும் சூழலியல் பேரழிவு’ என்று காங்கிரஸ் விமா்சித்துள்ளது. அந்தமான்-நிகோபாா் யூனியன் பிரதேசத்தில் கிரேட் நிகோபாா் தீவு உள்ளது. இங்கு ரூ.72,000 கோடி மதிப்பில் மிகப் பெரிய உள்கட... மேலும் பார்க்க