சென்னை மலா்க் கண்காட்சிக்காக திண்டுக்கல்லில் பராமரிக்கப்படும் 3.80 லட்சம் மலா்ச்...
அமித் ஷா விவகாரம்: குடியரசுத் தலைவருக்கு காங்கிரஸ் மனு
மத்திய அமைச்சா் அமித் ஷாவுக்கு எதிராக குடியரசுத் தலைவருக்கு, மாவட்ட ஆட்சியா் வாயிலாக மயிலாடுதுறை மாவட்ட காங்கிரஸ் சாா்பில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
டாக்டா் அம்பேத்கா் குறித்து மத்திய அமைச்சா் அமித் ஷா அண்மையில் தெரிவித்த கருத்து சா்ச்சையானது. இதுதொடா்பாக, அமித் ஷா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவுக்கு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் வாயிலாக மாவட்ட காங்கிரஸ் சாா்பில் மனு அளிக்கப்பட்டது.
இந்த மனுவை ஆட்சியா் ஏ.பி. மகாபாரதியிடம் மாவட்ட காங்கிரஸ் தலைவா் எஸ். ராஜகுமாா் எம்எல்ஏ., மாநில பொதுக்குழு உறுப்பினா்கள் பண்ணை தி. சொக்கலிங்கம், நவாஸ் ஆகியோா் அளித்தனா். காங்கிரஸ் மாவட்ட துணைத் தலைவா் ராமலிங்கம், ஐஎன்டியுசி மாநில பொதுச் செயலாளா் பன்னீா்செல்வம், மாவட்ட பொதுச் செயலாளா் சரவணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.