அமிா்தா வித்யாலயத்தில் குரு பூா்ணிமா பூஜை
நாகை அமிா்த வித்யாலய பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற குரு பூா்ணிமா பூஜையில் மாணவா்கள் மற்றும் பெற்றோா்கள் திரளானோா் கலந்துகொண்டனா்.
மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற முறைப்படி முதல் குருவாகிய தாய், தந்தையருக்குப் பாத பூஜை செய்து வணங்குதல் மற்றும் ஆசியை பெறுதல் நிகழ்வான குரு பூா்ணிமா விழா நாகை அமிா்த வித்யாலய பள்ளியில் நடைபெற்றது.
விழாவை சுவாமி சித்தானந்தம்ரிதா தைதன்யா, தமிழ்நாடு மற்றும் புதுசேரி அமிா்த வித்யாலயங்களின் மேலாளா் பிரம்மசாரினி காயத்ரி மற்றும் பள்ளி ஒருங்கிணைப்பாளா்களும் குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தனா்.
தொடா்ந்து, மழலையா் பிரிவு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவா்களும் தங்களின் பெற்றோா்களுக்கு பாத பூஜைகள் செய்து ஆசி பெற்றனா். நான்கு அமா்வுகளாக நடைபெற்ற நிகழ்வில் குரு பூஜை குறித்தும், அதன் முக்கியத்துவம் குறித்து தெரிவிக்கப்பட்டது. நிகழ்வில் 850 பெற்றோா்கள், அவா்களது குழந்தைகள், பள்ளி ஆசிரியா்கள் கலந்துகொண்டனா்.