செய்திகள் :

அமெரிக்காவில் கைதாகி விடுதலையான டிக்டாக் பிரபலம்! நாட்டை விட்டு வெளியேறினார்!

post image

அமெரிக்காவில் கைது செய்யப்பட்டு, விடுவிக்கப்பட்ட உலகப் புகழ்பெற்ற டிக்டாக் பிரபலம், அந்நாட்டிலிருந்து வெளியேறியுள்ளார்.

செனகல் நாட்டைச் சேர்ந்த டிக்டாக் பிரபலம் காபி லேம் (எ) கபானே லேம் (வயது 25). இவர், கடந்த ஏப்.30 ஆம் தேதி, விசா உள்ளிட்ட உரிய அனுமதிகளைப் பெற்று அமெரிக்காவுக்குச் சென்றுள்ளார்.

இந்நிலையில், கடந்த ஜூன் 6 ஆம் தேதியன்று லாஸ் வேகாஸ் நகரத்திலுள்ள ஹேரி ரெய்ட் பன்னாட்டு விமான நிலையத்தில், அந்நாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

இவர், தனது விசாவில் அனுமதிக்கப்பட்ட காலத்தைத் தாண்டி அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்ததினால், கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, காபி லேம், அமெரிக்காவிலிருந்து வெளியேற ஒப்புக்கொண்டுள்ளார். இதனால், அவர் மீது நாடு கடத்தும் நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படாமல், விடுவிக்கப்பட்டு, அந்நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அந்நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு எதிராக பல அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறார். இதற்கு, எதிர்ப்பு தெரிவித்து லாஸ் ஏஞ்சலஸ் நகரத்தில் மிகப் பெரியளவிலான மக்கள் போராட்டம் நடைபெற்று வரும் சூழலில் காபி லேம் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார்.

2020-ம் ஆண்டு கரோனா பரவலைக் கட்டுப்படுத்த விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு காலத்தில், ஒரு வார்த்தைக் கூட பேசாமல் அவர் வெளியிட்ட டிக்டாக் விடியோக்கள் மூலம் சர்வதேச அளவில் மிகவும் பிரபலமானார் காபி லேம். இவரது, டிக்டாக் கணக்கில் மட்டும் சுமார் 16 கோடி பேர் இவரைப் பின் தொடர்கிறார்கள்.

இத்துடன், கடந்த ஏப்ரல் மாதம் அமெரிக்கா சென்ற காபி லேம், மே மாதம் நியூயார்க் நகரத்தில் நடைபெற்ற மெட் காலா நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:டிரம்ப் குறித்து அப்படி பேசியதற்கு வருந்துகிறேன்: எலான் மஸ்க்

எதில் போய் முடியும் இஸ்ரேல்-ஈரான் மோதல்?

‘ஆப்பரேஷன் ரைஸிங் லயன்’ ஈரான் மீது வெள்ளிக்கிழமை அதிகாலை தொடங்கிய தாக்குதல் நடவடிக்கைக்கு இஸ்ரேல் வைத்துள்ள பெயா் இது. நீண்ட நேரம் பதுங்கியிருந்து இரையைப் பிடிப்பதற்காக எழுந்து பாயும் சிங்கத்தைப் போல,... மேலும் பார்க்க

ஈரானின் அணுசக்தி, ராணுவ மையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்: முக்கியத் தளபதிகள் உயிரிழப்பு

ஈரானின் அணுசக்தி, ராணுவ மையங்கள் மீது இஸ்ரேல் வெள்ளிக்கிழமை அதிகாலை தாக்குதல் நடத்தியது. ‘ஈரானின் அணுசக்தி கட்டமைப்புகள் மீதான இஸ்ரேல் தாக்குதலால் அபாயகரமான அளவுக்கு அணுக் கதிா்வீச்சு ஏற்படவில்லை’ என்... மேலும் பார்க்க

கிரீஸ்: புராதன துறவி மடம் நிலநடுக்கத்தில் சேதம்

கிரீஸில் ஏற்பட்ட தொடா் நிலநடுக்கம் காரணமாக அந்த நாட்டின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்த துறவி மடம் சேதமடைந்தது. மவுன்ட் அதாஸ் தீபகற்பகத்தில் இந்த வாரம் ஏற்பட்ட நிலநடுக்கம் ர... மேலும் பார்க்க

பிரதமர் மோடியுடன் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உரையாடல்!

ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட உலகத் தலைவர்களுடன், அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உரையாடியுள்ளார். ஈரானின் முக்கிய ராணுவ தளவாடங்கள், அணுசக்தி கட... மேலும் பார்க்க

கொடூர மரணங்களுக்கு முற்றுப்புள்ளி! ஈரானுக்கு டிரம்ப் மறைமுக எச்சரிக்கை!

இஸ்ரேல் - ஈரான் போருக்கு மத்தியில், அணு ஆயுத ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு, ஈரானுக்கு டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள அணுசக்தி நிலையங்கள், ராணுவ அலுவலகங்கள், ... மேலும் பார்க்க

இஸ்ரேலுக்கு பதிலடி? 100-க்கும் அதிகமான ட்ரோன்களை அனுப்பிய ஈரான்!

இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்க, 100-க்கும் மேற்பட்ட ராணுவ ட்ரோன்களை ஈரான் அனுப்பியுள்ளதாக, இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத... மேலும் பார்க்க