பிரதமர் மோடி திறந்து வைத்த தூத்துக்குடி விமான நிலைய புதிய முனையம்! - Event Cover...
’அமெரிக்காவை விட இந்தியாவில் தான்..’ கவனம் பெற்ற அமெரிக்க பெண்ணின் வீடியோ - பின்னணி என்ன?
அமெரிக்காவைச் சேர்ந்த சமூக ஊடக பதிவாளர் கிறிஸ்டன் ஃபிஷர், இந்தியாவில் தனது அன்றாட வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பது குறித்து பேசியிருக்கிறார்.
இந்தியாவில் தனது அன்றாட வாழ்க்கையையும் அனுபவங்களையும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வரும் இவர், சமீபத்தில் இந்திய ரூபாய் குறித்து எளிய வார்த்தைகளில் விளக்கி இணையவாசிகளிடம் கவனம் பெற்றுள்ளார்.
அமெரிக்க டாலரை விட இந்திய ரூபாய் மூலம் இந்தியாவில் அதிக பொருட்களை வாங்க முடியும் என்பதை தனது இன்ஸ்டாகிராம் வீடியோவில் தெளிவாக விளக்கியிருக்கிறார் கிறிஸ்டன் ஃபிஷர்.

கிறிஸ்டன் தனது வீடியோவில் கூறியதாவது “ரூபாய் உண்மையில் டாலரை விட சிறந்ததா? இந்தியாவில் வாழ்வது எவ்வளவு மலிவானது என்று பேசும்போது, வாங்கும் திறன் (Purchasing Power Parity - PPP) குறித்து சொல்ல வேண்டும்.
இந்தியாவில் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை அமெரிக்காவை விட மிகவும் குறைவு. அதாவது, இந்தியாவில் ஒரு ரூபாய், அமெரிக்காவில் ஒரு டாலருக்கு சமமான மதிப்பை விட அதிகமான பொருட்களை வாங்க முடியும். இதனால்தான் வாங்கும் திறன் பரிமாற்ற விகிதத்தில் ரூபாய் டாலரை விட உயர்ந்து காணப்படுகிறது.
அமெரிக்காவில் வருமானம் அதிகமாக இருக்கலாம், ஆனால் அங்கு எல்லாமே விலை உயர்ந்தவை. இந்தியாவில் வருமானம் குறைவாக இருக்கலாம்.
ஆனால் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலையும் குறைவு. உதாரணமாக இந்தியாவில் ஒரு முடி வெட்டுதலுக்கு சராசரி விலை 100 ரூபாய் ஆகும். ஆனால், அமெரிக்காவில் இதன் சராசரி விலை 40 டாலர்கள் (3,400 ரூபாய்) ஆகும்.
அதாவது அமெரிக்காவில் ஒரு முடி வெட்டுதலுக்கு செலவழிக்கும் பணத்தில் இந்தியாவில் 34 முடி வெட்டுதல்களைப் பெறலாம்” என்று பேசியிருக்கிறார். இந்த வீடியோ தான் இணையவாசிகளிடம் கவனம் பெற்று வருகிறது.