செய்திகள் :

அமேசான் நிறுவனருக்கு திருமணம்!

post image

அமேசான் நிறுவனரும் உலகப் பணக்காரர்களின் ஒருவருமான ஜெப் பெசோஸுக்கு ஜூன் மாதம் திருமணம் நடைபெறவுள்ளதாக அமெரிக்க செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க செய்தி ஊடகங்கள் தெரிவித்ததாவது, ஜெப் பெசோஸுக்கும் (61) அவரது காதலியான லாரன் சான்ச்சேஸுக்கும் (55) ஜூன் மாதம் 26 முதல் 29 தேதிகளில் திருமணம் நடைபெறவுள்ளது. முன்னதாக, இவர்களின் நிச்சயதார்த்தத்தின்போது லாரனுக்கு 5 மில்லியன் டாலர் மதிப்பிலான மோதிரத்தை ஜெப் பெசோஸ் பரிசாக வழங்கினார்.

இவர்களின் திருமணம், இத்தாலியில் உள்ள வெனிஸ் நகரில் ஒரு சொகுசு கப்பலில் நடத்தப்படவுள்ளது. தொடர்ந்து, விருந்தினர்களுக்காக கிரிட்டி பேலஸ் மற்றும் அமன் வெனிஸ் ஹோட்டல்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த ஹோட்டல்களின் ஓர் அறையின் ஓர் இரவுக்கு மட்டும் 3,200 டாலர் (ரூ. 2.7 லட்சம்) கட்டணமாக வசூலிக்கப்படும். அதனைவிட உயர்தர வகுப்பு அறைகள் 10 மடங்கு அதிகமாக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.

இந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இவான்கா டிரம்ப், ஜோர்டான் ராணி ரனியா, தொழிலதிபர் பில்கேட்ஸ், நடிகர் லியானார்டோ டிகாப்ரியோ முதலான முக்கிய அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஜெப் பெசோஸின் முன்னாள் மனைவி மேக்கென்ஸி ஸ்காட்டை விவாகரத்து செய்த 2019 ஆம் ஆண்டிலேயே லாரனுடன் காதலில் இருப்பதாக ஜெப் பெசோஸ் கூறினார். ஜெப் பெசோஸுக்கும் மேக்கென்ஸிக்கும் 4 குழந்தைகள் உள்ளனர்.

இதையும் படிக்க:3 நாள்களில் ரூ. 3 லட்சம் சம்பாதித்த பிச்சைக்காரர்!

இந்தியா-சீனா ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டும்: அதிபர் ஷி ஜின்பிங்

இந்தியா-சீனா இடையேயான இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டியது அவசியம் என்று சீன அதிபர் ஷி ஜின்பிங் வலியுறுத்தினார்.இந்தியா-சீனா இடையேயான இருதரப்பு தூதரக உறவுகளின் 75-ஆவது ஆண்டுவிழாவையொட்டி சீன அதிப... மேலும் பார்க்க

‘அணு ஆயுதம் தயாரிப்பதே ஈரானுக்கு ஒரே வழி’

அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகள் தங்கள் மீது தாக்குதல் நடத்தினால், அதை எதிா்கொள்ள தங்களுக்கு அணு ஆயுதம் தயாரிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா கமேனியின் முதன்மை ஆலோசக... மேலும் பார்க்க

இந்திய பொருள்களுக்கு வரிவிதிப்பு: டிரம்ப் இன்று அறிவிக்கிறாா்

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான அமெரிக்காவின் பரஸ்பர வரிவிதிப்புகளை அதிபா் டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை (ஏப். 2) அறிவிக்கவுள்ளாா். அமெரிக்க அதிபராக டிரம்ப் இரண்டாவது முறை பதவியேற்ற பின்னா், அந்நாட்டின் ... மேலும் பார்க்க

மியான்மா் நிலநடுக்கம்: 2,700-ஐ கடந்த உயிரிழப்பு

மியான்மரில் கடந்த வெள்ளிக்கிழமை நிகழ்ந்த சக்திவாய்ந்த நிலநடுக்கங்களில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 2,700-ஐக் கடந்துள்ளது. இது குறித்து அந்த நாட்டு ராணுவ ஆட்சியாளா் மின் ஆங் லியாங் தலைநகா் நேபிடாவில் ச... மேலும் பார்க்க

அமெரிக்க பொருள்கள் மீதான வரியை இந்தியா கணிசமாகக் குறைத்திடும்: மறைமுகமாக எச்சரிக்கிறாரா டிரம்ப்?

வாஷிங்டன்: இந்தியாவில் அமெரிக்க பொருள்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வரி விரைவில் குறைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.ஏப்ரல் 2-ஆம் தேதிமுதல், அமெரிக்க பொருள்களுக்கு எந்தெ... மேலும் பார்க்க

ரவாரம் இரு வேலைநாள்கள் மட்டுமே என்கிற நடைமுறை விரைவில் வரும்! -பில் கேட்ஸ்

செயற்கை நுண்ணறிவு(ஏஐ) தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியால் வாரம் இரு வேலை நாள்கள் மட்டுமே என்கிற நடைமுறை இன்னும் பத்தாண்டுகளில் வழக்கத்தில் இருக்கும் என்று பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார். ஏஐ தொழில்நுட்ப ... மேலும் பார்க்க