செய்திகள் :

அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

post image

அமைச்சர் ஐ.பெரியசாமி வீடு மற்றும் அவருக்கு நெருக்கமான நபர்களின் வீடுகளில் சனிக்கிழமை அதிகாலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றன.

சென்னை, மதுரை, திண்டுக்கல் என அவருக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சரான ஐ.பெரியசாமியின் சென்னை மற்றும் திண்டுக்கல்லில் உள்ள வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சனிக்கிழமை அதிகாலை முதல் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள ஐ.பெரியசாமியின் வீடு, சென்னை சேப்பாக்கம் சட்டப்பேரவை உறுப்பினர்கள் விடுதியிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை ஈடுபட்டு வருகின்றனர்.

இதேபோன்று திண்டுக்கல் மாவட்டம் துரைராஜ் நகரில் உள்ள வீடு், திண்டுக்கல் மாவட்டம் சிலப்பாடியில் உள்ள பழனி சட்டப்பேரவை உறுப்பினரும் திமுக கிழக்கு மாவட்ட செயலாளருமான ஜ.பி. செந்தில்குமார் வீட்டிலும் அதிகாலை முதல் தீவிர சோதனை நடைபெற்று வருகின்றன.

மேலும் ,வருகின்ற தேர்தல் குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் குறுகிய நாள்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஒவ்வொரு முறையும் பழைய வழக்குகள் குறித்து சுமார் 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு அமலாக்கத்துறை அதிகாரிகள் வெவ்வேறு மாவட்டங்களில் தொடர்ச்சியாக சோதனைகளில் ஈடுபடுவது வழக்கமானது.

தற்போது தொடர்ச்சியாக சனிக்கிழமை அதிகாலை முதல் ஐ. பெரியசாமி மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் முதல்முறையாக பிவி கண்காணிப்பு செயற்கைக்கோள் திரள் அமைக்க அனுமதி

Enforcement officials have been conducting intensive searches at the residence of Minister I. Periyasamy and the homes of people close to him since early Saturday morning.

சின்ன கண்ணன் அழைக்கிறான்..!

மேலும் செய்திகள் மற்றும் படங்களுக்கு... மேலும் பார்க்க

குழந்தைகளுக்கு ஆலோசனை சொல்லி வளர்த்தால் தான் விபத்துகளைத் தவிர்க்க முடியும்: எடப்பாடி பழனிசாமி

திருவண்ணாமலை: நாம் குழந்தைகளுக்கு ஆலோசனைகளை சொல்லி வளர்க்க வேண்டும். அப்போதுதான் விபத்துகளை தவிர்க்க முடியும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீ... மேலும் பார்க்க

எம்எல்ஏ விடுதியில் அத்துமீறி நுழைந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு

சென்னை சேப்பாக்கம் பகுதியில் உள்ள சட்டப்பேரவை உறுப்பினர்கள் விடுதியில் அத்துமீறி நுழைந்ததாக அமலாக்கத் துறையினர் மீது திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பணமோசடி வழக்கில், தமிழக ஊரக வ... மேலும் பார்க்க

அவசரமாக கோவையில் தரையிறங்கிய ஸ்பைஸ் ஜெட் விமானம்! ஏன்?

கோவை: துபாயில் இருந்து கொச்சி சென்ற ஸ்பைஸ் ஜெட் விமானம் ஒன்று மோசமான வானிலை காரணமாக கோவையில் தரையிறக்கப்பட்டது. உணவு, குடிநீர் எதுவுமின்றி அவதிக்குள்ளான பயணிகள் விமான நிறுவன ஊழியர்களுடன் வாக்குவாதத்தி... மேலும் பார்க்க

இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக புதினுடன் டிரம்ப் பெருமிதம்!

நியூயார்க்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் - ரஷிய அதிபர் விளாதிமிர் புதின் இடையேயான பேச்சுவார்த்தையின் போது இந்தியா - பாகிஸ்தான் உள்பட ஐந்து போர்களை தானே மத்தியஸ்தம் செய்து நிறுத்தியதாக மீண்டும் பெ... மேலும் பார்க்க

அமைச்சர் ஐ.பெரியசாமி, அவரது மகன், மகள் வீடுகளில் அமலாக்கத் துறை சோதனை

திண்டுக்கல்: அமைச்சர் ஐ. பெரியசாமி, அவரது மகனும் திமுக சட்டப்பேரவை உறுப்பினருமான ஐ.பி. செந்தில்குமார் மற்றும் மகள் இந்திராணி ஆகியோரது வீடு மற்றும் திண்டுக்கல்லில் உள்ள பல இடங்களில் அமலாக்கத்துறை அதிகா... மேலும் பார்க்க