செய்திகள் :

`அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசிய கிராமம் குறி வைக்கப்படுகிறது!’ - கொதிக்கும் அண்ணாமலை, அன்புமணி

post image
வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் 51 செ.மீ அளவுக்கு மழை கொட்டித் தீர்த்தது. அதன் காரணமாக தென்பெண்ணை ஆற்றில் பெருக்கடுத்த வெள்ளம், அதன் கிளை ஆறுகளான மலட்டாறு மற்றும் பம்பை ஆறுகளில் சீறிப் பாய்ந்தது.

அதனால் நவம்பர் 1-ம் தேதி அந்த ஆறுகளின் கரையோரங்களில் இருக்கும் திருவெண்ணெய்நல்லூர், அரசூர், இருவேல்பட்டு, ஆனத்தூர், காரப்பட்டு உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் சூழ்ந்த வெள்ளம் குடியிருப்புகளை மூழ்கடித்தது. அதனால் அந்தப் பகுதியிலுள்ள மக்கள் கடும் பாதிப்புக்குள்ளானார்கள். இருவேல்பட்டு பகுதியில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம், அங்கிருந்த சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையை பெயர்த்துக் கரைத்துச் சென்றது.

சாலை மறியல்

தங்கள் குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ள நீரை வெளியேற்றுவதற்கும், நிவாரணம் வழங்குவதற்கும் மாவட்ட நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கொதித்த அப்பகுதி மக்கள், நவம்பர் 3-ம் தேதி காலை 8 மணிக்கு சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையிலுள்ள இருவேல்பட்டில் இரண்டு இடத்திலும், அரசூர் கூட்டுரோட்டிலும் என மூன்று இடங்களில் சாலை மறியலில் அமர்ந்தனர். அதைக் கேள்விப்பட்ட உளுந்தூர்பேட்டை எம்.எல்.ஏ மணிக்கண்ணன் அங்கு சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அவரது சமாதானப் பேச்சை ஏற்க மறுத்த மக்கள், ``அமைச்சர் இப்போ இங்க வரணும். அப்போதான் நாங்க போராட்டத்தை நிறுத்துவோம்” என்று அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அந்த தகவல் மாவட்ட நிர்வாகம் மூலம் அமைச்சர் பொன்முடியின் கவனத்திற்கு கொண்டு செல்லபட்டது. அதையடுத்து காலை 11 மணிக்கு மகனும், தி.மு.க தெற்கு மாவட்ட பொறுப்பாளருமான கௌதம சிகாமணி, மாவட்ட ஆட்சியர் பழனி, விழுப்புரம் எஸ்.பி தீபக் சிவா, திருவாரூர் எஸ்.பி ஜெயக்குமார் உள்ளிட்ட அதிகாரிகளுடன் அங்கு வந்த அமைச்சர் பொன்முடி, தன்னுடைய காரில் இருந்தபடியே பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். அப்போது, `காரில் இருந்து இறங்க மாட்டீங்களா..?’ என்று அப்பகுதி மக்கள் கூச்சலிட்டனர். அதையடுத்து காரில்  இருந்து  இறங்கிய அமைச்சர் பொன்முடி, பேச்சு வார்த்தை நடத்துவதற்காக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களிடம் சென்றார். அப்போது திடீரென யாரோ சிலர் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கௌதம சிகாமணி, ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது சேற்றை வாரி இரைத்தனர்.

சாலை மறியல்

இந்தச் சம்பவம் குறித்து தனி பாதுகாப்புப் பிரிவு போலீஸ் சிறப்பு எஸ்.ஐ அருண் கொடுத்த புகாரின் அடிப்படையில், திருவெண்ணெய்நல்லூர் போலீஸார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்தனர். அந்த விசாரணையில் விஜயராணி, ராமர் என்ற ராமகிருஷ்ணன் என்ற இருவர்தான் அமைச்சர் மீது சேற்றை வீசியதாக தெரிவித்த போலீஸார், தலைமறைவான அந்த இருவரையும் தேடும் பணியில் இறங்கினர். ஆனால் தற்போது வரை அவர்கள் இருவரும் தலைமறைவாகவே இருந்து வருகின்றனர். அதனால் அவர்களின் உறவினர்களை அழைத்து வந்து விசாரணையை மேற்கொண்டு வருகிறது போலீஸ். அதன்படி ராமகிருஷ்ணனின் உறவினரான துரை என்பவரை நேற்று முன் தினம் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர் போலீஸார்.

அதையடுத்து காவல் நிலையத்துக்குச் சென்ற துரையின் உறவினர்கள் அவரை விடுமாறு கேட்டனர். ஆனால்  போலீஸார் அவரை விடாததால், துரையின் உறவினர்களும், இருவேல்பட்டு கிராம மக்களும் நேற்று முன் தினம் திருச்சி – சென்ன்னை தேசிய நெடுஞ்சாலையில், சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தொடர்ந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தச் சென்ற போலீஸாரிடம், ``அமைச்சர் பொன்முடி அவர்களே எங்கள் மீது எந்த வழக்கையும் பதிவு செய்ய வேண்டாம் என்று கூறியிருக்கிறார். ஆனால் நீங்கள் வழக்குபதிவு செய்து எங்களை கொடுமைப்படுத்துகிறீர்கள்” என்று கிராம மக்கள் வாக்குவாதம் செய்தனர். அப்போது போலீஸாருக்கும், கிராம மக்களுக்கும் வாக்குவாதம் முற்றி தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

அண்ணாமலை
அண்ணாமலை

அப்போது போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாக பா.ஜ.க ஒன்றியச் செயலாளர் கதிரவன், அன்புக்கரசி என்ற இருவரையும் கைது செய்தனர் போலீஸார். இது தொடர்பாக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், `மெட்ரோ தூணில் ஒட்டப்பட்ட முதலமைச்சர் ஸ்டாலின் போஸ்டர் மீது செருப்பை வீசிய வயதான பெண்மணி ஒருவரைத் தேடி அலைந்தவர்கள்,  தற்போது அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வீசியவர்களைத் தேடி அலைகிறார்கள். தி.மு.க ஆட்சி நடக்கும் லட்சணத்திற்கு இதுவே சாட்சி. இனி இதுவே முழுநேர வேலையாக இருக்கும் என்பது தெரிகிறது. விசாரணை என்ற பெயரில் கிராம மக்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று துன்புறுத்துவதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்திய பெண்கள் உள்ளிட்டவர்களை பலவந்தமாகக் கைது செய்திருக்கிறார்கள்.

உளுத்துப் போன காரணங்களைக் கூறி இருவேல்பட்டு மக்களை பழிவாங்குவதை நிறுத்திவிட்டு, ஃபெஞ்சல் புயல் நிவாரணங்கள் அனைவருக்கும் கிடைத்திருக்கிறதா என்று தி.மு.க அரசு உறுதி செய்ய வேண்டும்’ என்று கூறியிருக்கிறார். அதேபோல, `காவல்துறையினரின் அத்துமீறலைக் கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட இருவேல்பட்டு கிராம மக்கள் மீது காவல்துறையினர் கடுமையாக அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டுள்ளனர். வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த அப்பாவி இளைஞர்களையும் தீவிரவாதிகளைப் போல காவல்துறையினர் இழுத்துச் சென்றுள்ளனர். காவல்துறையின் இந்த அத்துமீறல் கடுமையாக கண்டிக்கத்தக்கது. உண்மையில் சாலைமறியல்  செய்தவர்களை அகற்ற வேண்டும் என்பது காவல்துறையின் நோக்கம் இல்லை.

அன்புமணி
அன்புமணி

மாறாக, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், கடந்த சில வாரங்களுக்கு முன் அமைச்சர் பொன்முடி மீது  சேறு வீசப்பட்ட கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களை பழிவாங்க வேண்டும், தண்டிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன்தான் இந்த அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது’ என்று பா.ம.க தலைவர் அன்புமணியும், `அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வீசியதற்காக பொதுமக்களை கைது செய்து பழி வாங்குவதா ? ஆதங்கத்தை வெளிப்படுத்திய மக்கள் மீது அடக்குமுறையை கையாண்டிருக்கும் தி.மு.க அரசின் அதிகாரப் போக்கு கண்டனத்திற்குரியது. அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசிய கிராமம் குறி வைக்கப்படுகிறது’ என்று அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரனும் அறிக்கை வெளியிட்டிருக்கின்றனர்.

Meta : 'கவனக்குறைவால் ஏற்பட்ட தவறு' - மார்க் கருத்துக்கு இந்தியாவிடம் மன்னிப்பு கேட்ட மெட்டா

இந்தியாவின் பொது தேர்தல் வெற்றி குறித்து தவறான கருத்து தெரிவித்த மெட்டா நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் சார்பாக மெட்டா நிறுவனம் தற்பொழுது மன்னிப்பு கோரி உள்ளது. கடந்த ஜனவரி 10ஆம் தேதி பாட்காஸ்ட் (Podcas... மேலும் பார்க்க

'ரூ.100.92 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்கிய ED' - அதிர்ச்சியில் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம்

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தற்போது ஒரத்தநாடு தொகுதி எம்.எல்.ஏவாக இருக்கிறார். இவர் ஓ.பன்னீர்செல்வம் அணியான அ.தி.மு.க உரிமை மீட்புக் குழுவில் இணை ஒருங்கிணைப்பாளர் பதவி வகிக்கிறார். இந்த ... மேலும் பார்க்க

கண்காணிக்கும் விசாரணை அமைப்புகள்... ஈரோட்டில் ரூட் போடும் அண்ணாமலை!

ஈரோடு கிழக்கு - இடைத்தேர்தல்ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலை அ.தி.மு.க., பா.ஜ.க., தே.மு.தி.க எனப் பெரும்பாலான எதிர்க்கட்சிகள் புறக்கணித்துள்ளன. நாம் தமிழர் கட்சி மட்டுமே தி.மு.க-வை எத... மேலும் பார்க்க

பெ.சண்முகம்: `சாதி, மதம் மறுப்பு காதல் திருமணம்; 50 ரூபாய் செலவு’ - குடும்பம் முதல் அரசியல் வரை..!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம் உடனான நேர்காணலில் நமது பல்வேறு கேள்விகளுக்கு நிதானமாக பதில் அளிக்கிறார். இதில் அவரின் குடும்பம், அரசியல் வருகை, களப்பணி உள்ளிட்ட பல்வேறு ... மேலும் பார்க்க

`தேசிய அளவிலான தேர்தலில் மட்டுமே `இந்தியா’ கூட்டணி’ - கைவிரித்த சரத் பவார்

மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு எதிர்க்கட்சிகளின் மகாவிகாஷ் அகாடி கூட்டணியில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. அடுத்த சில மாதங்களில் நடக்க இருக்கும் மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி தேர்தலில் தனித்த... மேலும் பார்க்க