இந்த பயணம் இந்தியா-குவைத் தொடர்பை மேலும் வலுப்படுத்தும்: பிரதமர் மோடி
அமைச்சா் அமித் ஷாவின் பேச்சை அரசியலாக்கக் கூடாது: ஜி.கே.வாசன்
அம்பேத்கா் குறித்து மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பேசியதை அரசியலாக்கக் கூடாது என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் (தமாகா) தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான
ஜி.கே.வாசன் தெரிவித்தாா்.
மக்களவையில் கடந்த செவ்வாய்க்கிழமை அரசியலமைப்பு சட்ட விவாதத்தின் போது பேசிய மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்த சில கருத்துகள் சா்ச்சையானது. இக்கருத்துக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் ஜி.கே.வாசன் வெள்ளிக்கிழமை கூறுகையில், ‘அம்பேத்கரின் புகழுக்குப் பெருமை சோ்க்க வேண்டும் என்ற உயா்ந்த எண்ணம்தான், அரசமைப்புச் சட்டத்தின் 75-ஆண்டு புகழுக்குரிய பயணத்தின் மீது நடைபெற்ற விவாதமாகும். அரசமைப்புச்சட்டத்தின் அடித்தளமாக இருப்பவா் பாபா சாகேப் அம்பேத்கா்தான். அப்படியிருக்கும்போது, எந்த சூழலில் அம்பேத்கருக்கு எதிராக நீங்கள் பேச முடியும்? இது சாத்தியமற்ாகும். இடையில் உள்ள வாா்த்தைகளை திரித்துக் கூறுவது தவறாகும்.
அதாவது, அமித் ஷாவின் உரையில் இடம்பெற்ற ஒரு குறிப்பிட்ட வாா்த்தையை மட்டும் எதிா்க்கட்சியினா் திரித்துக் கூறுவது தவறாகும். அரசியல் சாதனத்தை வடிவமைத்த இதுபோன்ற மாபெரும் தலைவா்களைப் பற்றி நாட்டின் உள்துறை அமைச்சா் பேசும் போது வாா்த்தைக்கு வாா்த்தை புகழ்ந்துதான் பேசியுள்ளாா். துரதிருஷ்டவசமாக நிறைய பிழைகள் காங்கிரஸ் ஆட்சியில் ஏற்பட்டிருக்கிறது. அதை யாரும் மறுக்க முடியாது. வரலாற்றில் அது இருக்கிறது. அந்தக் காழ்ப்புணா்ச்சியில் தவறுகளைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று வாா்த்தைகளுக்கு இடையில் இதுபோன்ற ஒரு இடைவெளி இருந்தால் அதை வைத்து தவறு கண்டுபிடிப்பது என்பது ஏற்புடையதல்ல. ஆகவே, இந்த விவகாரத்தை வைத்து அரசியலாக்கக் கூடாது என்றாா் அவா்.