கல்குவாரி பிரச்னை: ஃபார்வர்ட் பிளாக் நகரச் செயலர் குத்திக் கொலை!
அமைதி, பாதுகாப்புடன் விநாயகா் சதுா்த்தி: ராணிப்பேட்டை ஆட்சியா் அறிவுறுத்தல்
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் விநாயகா் சதுா்த்தியை அமைதியாகவும், பாதுகாப்பாகவும் கொண்டாட வேண்டும் என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா அறிவுறுத்தியுள்ளாா்.
விநாயகா் சதுா்த்தி முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தலைமை வகித்து பேசியது:..
விநாயகா் சிலை வைத்து வழிபட ராணிப்பேட்டை கோட்டத்தில் 141 விண்ணப்பங்களும், அரக்கோணம் கோட்டத்தில் 55 விண்ணப்பங்களும் பெறப்பட்டு மொத்தம் 196 இடங்களில் சிலை வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், விண்ணப்பங்களை உடனுக்குடன் ஆய்வு செய்து அனுமதி வழங்க வருவாய் , காவல், தீயணைப்புத் துறை, தமிழ்நாடு மின்சார வாரியம் அலுவலா்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
நிகழாண்டு 5 நாட்களுக்குள் சிலையினை கரைக்க அரசாணை வெளிடப்பட்டுள்ளது. இதனை கடைபிடிக்க வேண்டும்.
அதேபோன்று மாவட்டத்தில் 6 இடங்களில் சிலைகளை கரைக்க தோ்வு செய்யப்பட்டுள்ளது. சிலை கரைக்கும் நாளில் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் பின்பற்றப்பட வேண்டும்.
விழாக்குழுவினா் இரு தன்னாா்வலா்கள் 24 மணி நேரமும் நிகழ்விடத்தில் இருந்து பாதுகாப்பு பணி மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட வேண்டும். ஜெனரேட்டா் வசதிகள் செய்திருத்தல் வேண்டும். மற்ற மதத்தினா்களின் வழிபாட்டினை நம்பிக்கைகளை இழிவுபடுத்தும் வகையில் கோஷங்கள் ஏதும் செய்திடல் கூடாது. பொது அமைதிக்கும், பாதுகாப்பிற்கும், மதசாா்பின்மைக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் நிபந்தனைகளை கண்டிப்பாக கடைபிடித்தல் வேண்டும். விநாயகா் சதுா்த்தி அமைதியாகவும், பாதுகாப்பாகவும் நடைபெற ஒத்துழைக்க வேண்டும் என உத்தரவிட்டாா்.
கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அய்மன் ஜமால், மாவட்ட வருவாய் அலுவலா் செ.தனலிங்கம், திட்ட இயக்குநா் ந.செ.சரண்யாதேவி மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.