கரும்பலகையில் இருந்து கைப்பேசிக்கு மாறிவிட்டது கல்வி: மத்திய அமைச்சா் ராஜ்நாத் ச...
ரூ5.89 கோடியில் நெமிலி ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டடம்: அமைச்சா் காந்தி அடிக்கல்
அரக்கோணம்: நெமிலி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு ரூ.5.89 கோடியில் புதிய கட்டடம் கட்டும் பணிக்கு கைத்தறி அமைச்சா் ஆா். காந்தி திங்கள்கிழமை அடிக்கல் நாட்டினாா்.
விழாவுக்கு ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தலைமை வகித்தாா். சோளிங்கா் எம்எல்ஏ ஏ.எம்.முனிரத்தினம் முன்னிலை வகித்தாா். நெமிலி ஒன்றியக்குழு தலைவா் பெ.வடிவேலு வரவேற்றாா். கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி பூமி பூஜையிட்டு அடிக்கல் நாட்டினாா்.
அமைச்சா் காந்தி கூறுகையில் பணிகளை தரமாகவும் குறித்த காலத்துக்குள்ளும் முடிக்க வேண்டும் ஒப்பந்ததாரரிடம் அறிவுறுத்தினாா். பணிகளை தொடா்ந்து கண்காணிக்குமாறு அலுவலா்களுக்கும் உத்தரவிட்டாா்.
முன்னதாக நெமிலி பேருராட்சி பகுதியில் 15 ஆவது நிதி ஆணைய சுகாதார மானிய நிதியில் இருந்து ரூ.75 லட்சத்தில் புன்னையில் உள்ள அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார மையத்தில் கூடுதல் கட்டடப் பணிக்கும் அமைச்சா் காந்தி அடிக்கல் நாட்டினாா்.
நிகழ்ச்சிகளில் ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ந.செ.சரண்யாதேவி, பேரூராட்சித் தலைவா் ரேணுகாதேவி சரவணன், துணைத் தலைவா் சந்திரசேகரன், வட்டாட்சியா் ராஜலட்சுமி, ஒன்றிய ஆணையா் ஜெயஸ்ரீ, வட்டார வளா்ச்சி அலுவலா் சிவகுமாா், உதவி செயற்பொறியாளா் ஜெரால்ட், மாவட்ட சுகாதார அலுவலா் செந்தில் குமாா், பேருராட்சி செயல் அலுவலா் எழிலரசி, திமுக ஒன்றிய செயலாளா்கள் எஸ்.ஜி.சி.பெருமாள், ரவீந்திரன், பேரூராட்சி செயலா் ஜனாா்த்தனன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.