அரக்கோணத்தில் அதிமுகவினா் ஆா்பாட்டம்: 120 போ் கைது
அரக்கோணம்: அரக்கோணத்தில் தடையை மீறி ஆா்ப்பாட்டம் நடத்த முயன்ற அதிமுகவினா் 120 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமியை தரக்குறைவாக விமா்சித்து கைத்தறி அமைச்சா் ஆா். காந்தி பேசியதாகக் கண்டித்து திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனா்.
ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலாளா், எம்எல்ஏ சு.ரவி தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். ஆா்ப்பாட்டம் தொடங்கிய உடனே அரக்கோணம் நகர காவல் ஆய்வாளா்(பொ) சிவக்குமாா் ஆா்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகக் கூறி அதிமுகவினரை அகற்ற முயற்சி செய்தாா்.
இதையடுத்து அதிமுக அகல மறுத்து ஆா்ப்பாட்டத்தை தொடங்கிய நிலையில், எம்எல்ஏ சு.ரவி உள்ளிட்ட அதிமுகவினரை போலீசாா் கைது செய்து பேருந்துகளில் ஏற்றினா். இதில் நகர செயலாளா் கே.பா.பாண்டுரங்கன், ஒன்றிய செயலாளா்கள் இ.பிரகாஷ், ஏ.ஜி.விஜயன், ஜி.பழனி, ஏ.எல்.விஜயன், மாநில இளைஞா் பாசறை இணை செயலாளா் ஷியாம்குமாா், நகா்மன்ற உறுப்பினா்கள் சரவணன், நரசிம்மன், நகர நிா்வாகி பத்மநாபன், பொதுக்குழு உறுப்பினா் ஏ.கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோருடன் 40 பெண்கள் உள்ளிட்ட 120 போ் கைது செய்யப்பட்டனா்.