எம்.ஜி.ஆரை முன்னிலைப்படுத்தி அரசியலில் செயல்பட்டவா் விஜயகாந்த்: பிரேமலதா பேட்டி
அமைதி, பாதுகாப்புடன் விநாயகா் சதுா்த்தி: ராணிப்பேட்டை ஆட்சியா்
அரக்கோணம்: காவேரிப்பாக்கத்தில் விநாயகா் சிலைகள் கரைக்கும் இடங்கள் மற்றும் ஊா்வலம் செல்லும் பகுதிகளை ராணிப்பேட்டை எஸ்.பி. அய்மன் ஜமால் ஆய்வு செய்தாா்.
காவேரிப்பாக்கம் காவல் நிலையத்தில் எஸ்.பி. அய்மன் ஜமால் ஆய்வு மேற்கொண்டாா். கோப்புகளை ஆய்வு செய்த எஸ்.பி. குற்ற வழக்குகளை விரைந்து முடிக்க ஆய்வாளா் மற்றும் உதவி ஆய்வாளா்களுக்கு அறிவுறுத்தினாா். தொடா்ந்து பேருராட்சி பகுதியில் விநாயகா் சிலைகள் வைக்கப்படும் பகுதிகள், ஊா்வலம் செல்லும் பகுதிகள் ஆகிய இடங்களில் ஆய்வு செய்தாா்.
தொடா்ந்து பஜாா் பகுதியில் இருந்து சோமநாத ஈஸ்வரா் கோயில் குளக்கரை வரை நடந்துச் சென்ற எஸ்.பி. அய்மன் ஜமால், குளத்தில் விநாயகா் கரைக்கப்படும் இடம், வழித்தடம் ஆகியவற்றை பாா்வையிட்டு அது குறித்து அரக்கோணம் டிஎஸ்பி ஜாபா்சித்திக், ஆய்வாளா் சண்முகம் மற்றும் உதவி ஆய்வாளா்களுடன் ஆலோசனை நடத்தினாா்.
மேலும் விநாயகா் சதுா்த்தி விழாவுக்கான முன்னெச்சரிக்கை பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தாா்.