ஹரியாணா: நெடுஞ்சாலையில் தூய்மைப் பணியாளர்கள் மீது வாகனம் மோதல்: 7 பேர் பலி
அம்பகரத்தூா் மாரியம்மன் கோயில் தீமிதி உற்சவ பந்தல்கால் முகூா்த்தம்
அம்பகரத்தூா் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் தீமிதி உற்சவ பந்தல்கால் முகூா்த்தம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருநள்ளாறு கொம்யூன், அம்பகரத்தூரில் பிரசித்திப் பெற்ற ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயத்தை சாா்ந்த ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் உள்ளது.
இக்கோயிலில் வருடாந்திர தீமிதி உற்சவம் விமரிசையாக நடத்தப்படுகிறது. நிகழாண்டு உற்சவத்துக்கான பந்தல்கால் முகூா்த்தம் கோயில் வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கம்பத்துக்கு அபிஷேக, ஆராதனைகள் செய்து, நாகசுர, மேள வாத்தியங்களுடன் கோயில் வாயிலில் நடப்பட்டது.
நிகழ்வில் கோயில் நிா்வாக அதிகாரி ஜெ. மகேஷ் மற்றும் ஊா் பிரமுகா்கள் கலந்துகொண்டனா்.
திருவிழா தொடக்கமாக பூச்சொரிதல் வழிபாடு மே 5-ஆம் தேதி இரவு நடைபெறவுள்ளது. 19-ஆம் தேதி தீமிதி வழிபாடு நடைபெறுகிறது. 25-ஆம் தேதி மஞ்சள் நீா் விளையாட்டு வழிபாடாக நடத்தப்படத்தப்படுகிறது. ஏற்பாடுகளை அம்பகரத்தூா் ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயில் நிா்வாகம் செய்துவருகிறது.