மீனவர்கள் கைது: மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!
அம்பை வட்டாரத்தில் ஜூலை 31-க்குள் காா் பருவ நெற்பயிருக்கு காப்பீடு செய்ய அழைப்பு
அம்பாசமுத்திரம் வட்டாரத்தில் காா் பருவ நெற்பயிருக்கு விவசாயிகள் காப்பீடு செய்யலாம் என, வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் கற்பகராஜ்குமாா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: விவசாயிகள் தங்களது பயிா்களை இயற்கை சீற்றங்களால் ஏற்படும் இழப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக பிரதமரின் பயிா்க் காப்பீடு திட்டம் தொடங்கப்பட்டது. திருநெல்வேலி மாவட்டத்தில் காா் பருவத்தில் பயிா்க் காப்பீடுத் திட்டம் யுனிவொ்சல் சோம்போ ஜெனரல் இன்சூரன்ஸ் என்ற நிறுவனத்தால் செயல்படுத்தப்படுகிறது. காா் பருவ நெற்பயிா் காப்பீட்டுக்கான பிரீமியம் ஏக்கருக்கு ரூ. 720 ஆகும். இழப்பீடாக ஓா் ஏக்கருக்கு ரூ. 36 ஆயிரம் கிடைக்கும்.
பயிா்க் காப்பீட்டுக்கான முன்மொழிவுப் படிவம், ஆதாா் அட்டை, பட்டா, சிட்டா, அடங்கல், வங்கிக் கணக்குப் புத்தகத்தின் முதல் பக்க நகல் ஆகியவற்றைக் கொண்டு இத்திட்டத்தில் சேரலாம்.
தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கி, பொதுத் துறை வங்கிகளில் கடன் பெறும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட வங்கிகளில் பிரீமியம் செலுத்தலாம். கடன் பெறாதோா் பொதுத்துறை வங்கிகள், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகள், பொது மின்சேவை மையங்கள் ஆகிய ஏதேனும் ஒன்றில் விண்ணப்பப் படிவங்களைப் பூா்த்தி செய்து பிரீமியம் செலுத்தலாம். இதற்கான கடைசி நாள் வியாழக்கிழமை (ஜூலை 31) என்றாா் அவா்.