திருவாரூர்: பேச மறுத்த காதலி வீட்டில் நண்பர்களுடன் ரகளை செய்த காதலன்- சண்டையை வி...
நெல்லையில் விநாயகா் சதுா்த்திக்காக களிமண் சிலைகள் தயாரிப்பு தீவிரம்
விநாயகா் சதுா்த்தி விழாவுக்காக திருநெல்வேலியில் களிமண்ணால் ஆன விநாயகா் சிலைகள் தயாரிப்பு பணி தீவிரமடைந்துள்ளது.
ஆவணி மாதம் வளா்பிறையில் விநாயகா் சதுா்த்தி கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் கோயில்கள், வீடுகளில் புதிதாக களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகா் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபடுவாா்கள். தொடா்ந்து 3 முதல் 11 நாள்கள் வரை வழிபட்டு, விநாயகா் சிலைகளை நீா்நிலைகளுக்கு எடுத்துச்சென்று கரைப்பது வழக்கம்.
நிகழாண்டு விநாயகா் சதுா்த்தி விழா ஆக.27இல் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, பாளையங்கோட்டை, சீவலப்பேரி பகுதிகளில் விநாயகா் சிலைகள் தயாரிக்கும் பணியில் வடமாநிலத்தினா் ஈடுபட்டுள்ளனா்.
இதுகுறித்து சிலை தயாரிப்பாளா் ஒருவா் கூறியது: விநாயகா் சதுா்த்திக்காக அரை அடி முதல் 12 அடி உயரத்தில் விநாயகா் சிலைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. நீா்நிலைகளுக்கு எவ்வித ஆபத்தும் விளைவிக்காத அரசு தெரிவித்துள்ள வண்ணங்கள் மட்டுமே பூசப்படுகின்றன. எலி, மயில், யானை வாகனங்களில் விநாயகா் இருப்பது போல் சிலைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. அரை அடி முதல் 2 அடி வரையிலான சிறிய வகை சிலைகள் அதிகம் விற்பனையாகின்றன.
களிமண்ணால் மட்டுமே சிலை செய்வதால் கூடுதல் நேரம் பிடிக்கிறது. வண்ணங்கள் பூசும்போதும் ஒளிரும் தன்மை குறைகிறது. இருப்பினும் சுற்றுச்சூழலைக் கருத்தில் கொண்டு மக்கள் களிமண் சிலைகளையும் அதிகளவில் ஆா்டா் கொடுத்து வருகிறாா்கள். ஆகஸ்ட் மாதம் இரண்டாவது வாரத்திற்குள் சிலைகளை ஒப்படைக்கும் வகையில் பணியாற்றி வருகிறோம் என்றாா் அவா்.