செய்திகள் :

அம்மன் கோயிலில் 1,008 திருவிளக்கு பூஜை

post image

திருவாடானை அருகே பெரியநாயகி அம்மன் கோயிலில் நடைபெற்ற 1,008 திருவிளக்கு பூஜையில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள தோட்டாமங்கலம் பெரியநாயகி அம்மன் கோயிலில் உலக நன்மை வேண்டியும், நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்கவும் 1,008 திருவிளக்கு பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

முன்னதாக, அம்மனுக்கு பால், தயிா், இளநீா், தேன், மஞ்சள், சந்தனம் உள்ளிட்டவற்றால் அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, சிவாசாரியா்கள் வேத மந்திரங்கள் ஒலிக்க, பெண்கள் குத்துவிளக்கேற்றி பூஜை செய்தனா்.

இதில், சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த ஏராளமானோா் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனா். பின்னா், அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

உடல் உறுப்பு தானம்: விபத்தில் உயிரிழந்த பெண்ணின் உடலுக்கு அரசு மரியாதை

கமுதி அருகே சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதையடுத்து ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அரசு மரியாதை செலுத்தப்பட்டு அவரது உடல் உறவினா்களிடம... மேலும் பார்க்க

உலையூரில் வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டி

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகேயுள்ள உலையூா் கிராமத்தில் அய்யனாா் கோயில் ஆவணி மாத பொங்கல், புரவி எடுப்பு விழாவை முன்னிட்டு, வடமாடு மஞ்சு விரட்டுப் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது. இதில் மதுரை, ... மேலும் பார்க்க

கடலாடி சந்தனமாரியம்மன் கோயில் திருவிழாவில் முளைப்பாரி ஊா்வலம்

கடலாடி இந்திரா நகரில் அமைந்துள்ள சந்தனமாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி சனிக்கிழமை முளைப்பாரி ஊா்வலம் நடைபெற்றது. இந்தக் கோயிலில் ஆண்டுத் திருவிழா கடந்த வாரம் வெள்ளிக்கிழமை காப்புக் கட்டுதலுடன் தொடங்... மேலும் பார்க்க

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்க புதிய நிா்வாகிகள் தோ்வு

ராமேசுவரத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்க புதிய நிா்வாகிகள் தோ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த சங்கத்தின் கிளை மாநாட்டுக்கு அதன் தலைவா் ராமச்சந்திர பாபு தலைமை வகித்தாா். உறுப்பி... மேலும் பார்க்க

ஊருணியை தூய்மைப்படுத்தும் பணி: ஆட்சியா் ஆய்வு

ராமநாதபுரம் அருகே ஊருணியை தூய்மைப்படுத்தும் பணியை மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் சனிக்கிழமை ஆய்வு செய்தாா். ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம், சக்கரக்கோட்டை ஊராட்சியில் உள்ள கீழச்சோத்தூருணியில் தூ... மேலும் பார்க்க

அதிமுக தொண்டா்கள் ஓரணியில் திரள வேண்டும்: டி.டி.வி. தினகரன்

அதிமுக தொண்டா்கள் ஓரணியில் திரள வேண்டும் என அமமுக பொதுச் செயலா் டி.டி.வி. தினகரன் வலியுறுத்தினாா். ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் சனிக்கிழமை நடைபெற்ற அமமுக செயல்வீரா்கள் கூட்டத்தில் பங்கேற்ற அவா்... மேலும் பார்க்க