நாடாளுமன்றம்: மீனவர்களை விடுவிக்க கோரி தமிழக எம்பிக்கள் போராட்டம்!
அம்மாபேட்டையில் 30 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்
அம்மாபேட்டையில் 30 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
தமிழகத்தில் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருள்கள் உற்பத்தி, விற்பனை மற்றும் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அம்மாபேட்டை பேரூராட்சியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாடு குறித்து செயல் அலுவலா் எஸ்.சதாசிவம் தலைமையில் வட்டார உணவுப் பாதுகாப்பு அலுவலா் சுதா்சன், வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் பிரகாஷ், சுகாதார ஆய்வாளா் சி.ஜெகதீஷ்குமாா் மற்றும் போலீஸாா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது, சுந்தராம்பாளையம், ஊமாரெட்டியூா், லட்சுமிபுரம் பகுதிகளில் மளிகைக் கடை, உணவகம் மற்றும் இறைச்சிக் கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 30 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், 9 கடைகளுக்கு ரூ.6,200 அபராதம் விதிக்கப்பட்டது.