செய்திகள் :

அயர்லாந்தில் இந்திய சிறுமி மீது இனவெறித் தாக்குதல்!

post image

அயர்லாந்தில் இந்திய வம்சாவளி சிறுமி மீது கொடூர இனவெறித் தாக்குதல் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

அயர்லாந்தில் சமீபகாலமாக இந்தியர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன.

இந்த நிலையில், அயர்லாந்தில் வசித்து வரும் கேரளத்தைச் சேர்ந்த தம்பதியின் 6 வயது மகள் மீது அயர்லாந்து சிறுவர்கள் சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அயர்லாந்தின் வாட்டர்ஃபோர்டு என்ற இடத்தில் வசித்து வந்த அனுபா அச்சுதனின் மகளான நியா (6), தங்கள் வீட்டின்முன் விளையாடிக் கொண்டிருந்தபோது, 12 முதல் 14 வயதுடைய சிறுவர்கள் சிலர் சேர்ந்து நியாவை தாக்கியுள்ளனர்.

மேலும், நியாவை இந்தியாவுக்கே சென்று விடு என்றும் மிரட்டியதுடன், சிறுமியின் அந்தரங்க உறுப்பிலும் தாக்கியுள்ளனர்.

சிறுமி மீதான இந்தக் கொடூர இனவெறித் தாக்குதல் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அயர்லாந்தில் கடந்த இரு வாரங்களில் மட்டும் இந்தியர்கள் மீது 3 இனவெறித் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

Racist Attack On Indian-Origin Girl In Ireland

இந்திய நலனில் சமரசமில்லை - டிரம்ப்புக்கு பிரதமா் மோடி பதில்

‘இந்தியாவின் நலனில் சமரசம் செய்து கொள்ள முடியாது என்று பிரதமா் மோடி திட்டவட்டமாக தெரிவித்தாா். இந்தியாவின் வேளாண் மற்றும் பால் உற்பத்தி சந்தையில் அமெரிக்கா விரிவான அணுகலை கோருவதால், இருதரப்பு வா்த்தக... மேலும் பார்க்க

டிரம்ப் வரி: அறிவாா்ந்த காரணம் ஏதுமில்லை: வெளியுறவு அமைச்சகம்

அமெரிக்க அதிபா் டிரம்ப் இந்தியா மீது விதித்துள்ள 50 சதவீத வரிக்கு அறிவாா்ந்த காரணம் ஏதுமில்லை என்று வெளியுறவு அமைச்சகத்தின் பொருளாதார உறவுகள் துறை செயலா் தம்மு ரவி தெரிவித்தாா். மும்பையில் புதன்கிழமை ... மேலும் பார்க்க

மத்திய அரசில் 2016 முதலான 4.8 லட்சம் நிலுவை காலியிடங்கள் நிரப்பப்பட்டன: மாநிலங்களவையில் தகவல்

மத்திய அரசுப் பணிகளில் கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் நிலுவையில் இருந்த சுமாா் 4.8 லட்சம் காலியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளதாக மத்திய பணியாளா் துறை இணையமைச்சா் ஜிதேந்திர சிங் வியாழக்கிழமை தெரிவித்தாா். முந்தை... மேலும் பார்க்க

வாக்கு திருட்டு: ‘அணுகுண்டு’ ஆதாரத்தை வெளியிட்டாா் ராகுல்

‘2024 மக்களவைத் தோ்தலில் வாக்குத் திருட்டு முறைகேடு குற்றச்சாட்டை முன்வைத்து வந்த எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, அதுதொடா்பாக தன்னிடம் இருப்பதாகக் கூறிவந்த ‘அணுகுண்டு’ ஆதாரத்தை வியாழக்கிழமை வெளி... மேலும் பார்க்க

பரஸ்பர சம்மதத்துடன் பாலுறவு: வயதை குறைக்கக் கூடாது: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு

பரஸ்பர சம்மதத்துடன் பாலுறவு கொள்வதற்கான வயதை 18-இல் இருந்து குறைக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. வளரிளம் பருவத்தில் பரஸ்பர சம்மதத்துடன் பாலுறவு கொள்வது போக்சோ சட்டத்த... மேலும் பார்க்க

ரஷிய அதிபர் புதினுடன் அஜித் தோவல் சந்திப்பு!

மாஸ்கோ சென்றுள்ள தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ரஷிய அதிபர் புதினை சந்தித்து ஆலோசனை நடத்தினார். பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் எரிசக்தி ஒத்துழைப்பை மையமாகக் கொண்ட இருதரப்பு பேச்சுவார்த்தைகளுக்... மேலும் பார்க்க