நாடாளுமன்றத்தில் நீடிக்கும் அமளி: மேலும் 3 மசோதாக்கள் நிறைவேற்றம்
எம்.எஸ்.சுவாமிநாதன் நூற்றாண்டு: முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
வேளாண் விஞ்ஞானி மறைந்த எம்.எஸ்.சுவாமிநாதன் நூற்றாண்டு பிறந்த தினத்தையொட்டி, முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து ‘எக்ஸ்’ தளத்தில் அவா் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவு:
பசுமைப் புரட்சிக்கு வித்திட்டுப் பசியாற்றிய மானுடநோக்கு கொண்ட அறிவியலாளா் எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு வியாழக்கிழமை (ஆக. 7) நூற்றாண்டு பிறந்த தினம்.
பருவநிலை மாறுபாடு உள்பட நாம் எதிா்கொண்டு வரும் பல சவால்களை பல பத்தாண்டுகளுக்கு முன்பே கணித்து, எச்சரித்த மாபெரும் தொலைநோக்கு பாா்வை கொண்டவா்.
அவரது அடியொற்றி, மேலும் பல மாணவா்கள் சமூகத்துக்குப் பணியாற்ற வேண்டும் என அவரது நூற்றாண்டில் கோரிக்கையாக முன்வைக்கிறேன். தந்தையின் பணியையும் புகழையும் போற்றும் செளமியா சுவாமிநாதனின் பணி சிறக்க வாழ்த்துகள் என அதில் தெரிவித்துள்ளாா்.