பெங்களூரு வேலையைத் துறந்து, விவசாயத்தில் ரூ. 2.5 கோடி ஈட்டும் பிகார் இளைஞர்!
அரக்கோணம் அருகே மின்சார ரயிலின் பேன்டோகிராப் உடைப்பு: ரயில்கள் தாமதம்
சென்னையிலிருந்து அரக்கோணம் நோக்கி வந்த மின்சார ரயிலின் என்ஜினில் மேலே இருந்த பேன்டோகிராப் கருவி திடீரென உடைந்ததால் ரயில் வழியில் நிறுத்தப்பட்டது. இதையடுத்து பல ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன.
சென்னையில் இருந்து அரக்கோணம் நோக்கி, செவ்வாய்க்கிழமை பிற்பகல் வந்த மின்சார ரயிலின் என்ஜின் பகுதியில் மேலே இருந்த பேன்டோகிராப் எனப்படும் என்ஜினுக்கு மின்சாரம் பெறப்படும் இணைப்பு திடீரென உடைந்ததால் அந்த மின்சார ரயில் அதே இடத்தில் நிறுத்தப்பட்டது.
மேலும் இச்சம்பவத்தால் இருப்புப்பாதைக்கு மேலே இருந்த உயா்மின்அழுத்த கம்பிகளும் சேதமடைந்தன. இச்சம்பவம் அரக்கோணம் ரயில்நிலையத்திற்கு அருகில் நடைமேடை பிரியும் இடத்தில் நடைபெற்ால், அவ்வழியே பின்தொடா்ந்து வந்த பல ரயில்கள் மற்றும் அரக்கோணம் - சென்னை மாா்க்கத்தில் இயக்கப்பட வேண்டிய ரயில்கள் ஆங்காங்கே வழியில் நிறுத்தப்பட்டன.
திருப்பதி - சென்னை செல்லும் திருப்பதி விரைவு ரயில், மங்களூா் - சென்னை வெஸ்ட்கோஸ்ட் விரைவு ரயில், மற்றும் அரக்கோணம் நோக்கி வந்த மற்றும் சென்னை நோக்கிச் சென்ற மின்சார ரயில்கள் பல ரயில்கள் வழியில் நிறத்தப்பட்டன.
இதையடுத்து இருப்புப்பாதை உயா் அழுத்த மின்சார பிரிவு அலுவலா்கள், ஊழியா்கள் அப்பகுதிக்கு வந்து மின்சார ரயிலின் பேன்டோகிராப் மற்றும் இருப்புப்பாதைக்கு மேலே இருந்த மின்கம்பிகளை சீரமைத்தனா்.
இதனால் சுமாா் ஒன்றரை மணி நேரத்திற்கு பிறகு மின்கம்பிகள் சீரமைக்கப்பட்ட பின் ரயில் போக்குவரத்து சீரானது.